பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530

தமிழர் வரலாறு

'நிழல் காண்தோறும் நெடியவைகி, மணல் காண்தோறும் வண்டல் தைஇ வருந்தாது ஏ.கு...நறுந்தண் பொழில கானம்; குறும்பல் ஊர யாம் செல்லும் ஆறே' (நற் : 9) எனப் பாலை பாடிய பெருங்கடுங்கோ. வழி காட்டுவது காண்க.

பத்துப்பாட்டு எட்டுத் தொகையாகிய பழந்தமிழ்ப் பாடல்களில், நூற்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிற்றுார், பேரூர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள், அள்ளுர், வேலூர் என்பன போல், ஊர் என முடிவன இருபத்தைந்து மட்டுமே. அவை ஒழிந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊர்களில், ஆர்க்காடு என்பதுபோல், காடு என முடிவன சில; ஆலங்குடி என்பதுபோல், குடி என முடி வன சில, இடையாறு என்பதுபோல். ஆறு என முடிவன சில. இவைபோல்வன ஒரு சில தவிர்த்து ஏனைய எல்லாம், அம்பர், உறந்தை, இருப்பை, குமரி, கூடல், கோழி, வஞ்சி, வேம்பி என்ணபோலும், இடுகுறிப் பெயர்களாகவே அழைக்கப் பெற்றுள்ளன. இவ்வகையால் பெயர் பெற்ற ஊர்களில், ஆலங்கானம், ஆலமுற்றம் இருப்பை, காஞ்சி, வஞ்சி, வாகை போல்னை மரத்தால் பெயர் பெற்றவை கரந்தை, காஞ்சி, து சி, வஞ்சி, வாகை என்பனவற்றைப் புறத்திணை வகைகளால் பெயர் பெற்றனவாகவும் கொள்ளலாம்:

சமஸ்கிருதம் அல்லது, அது சார்ந்த மொழி வழங்கும் வட நாட்டில், ஊர்ப் பெயர்கள் 'புரி' அல்லது 'புரம்' என்பதை ஈற்றில் கொண்டனவா, அயோத்தியாபுரி, துவரகாபுரி, மதுராபுரி, அஸ்தினாபுரம் எனப் பெயர் சூட்டப்பட்டதை ஒட்டி, இச்சமஸ்கிருத மொழியாளர்கள், தமிழகத்தில் வேர் ஊன்றிய காலத்திற்குப் பின்னர், 'புரம்' என்பதை ஈற்றில் கொண்டுவிட்ட, இராமனாதபுரம்,

காஞ்சீபுரம், சோழலிங்காபுரம், தி ரு வ த் தி பு ர ம், திருவனந்தபுரம், வாணாபுரம், விரிஞ்சீபுரம், விழுப்புரம் போலும் சில ஊர்ப் பெயர்கள் தமிழகத்திலும் இடம்பெற்று விட்டாலும், பண்டைத் தமிழகத்தில், எந்த ஒரு ஊர்ப்பெயரும் 'புரம்' என்ற ஈற்றினைக் கொண்டதாக அமைய