பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534

தமிழர் வரலாறு

ஒரு நிகராக அமர்ந்து வட்டாடும் நெருக்கமும், அவ்வட்டாடலை அவன் பிழை பட ஆடிய போது, அவனைக் கண்டிக்கும் உரிமையும், அவன் தன் பிழை உணர்ந்து வருந்தியபோது, அவனைப் பாராட்டிய பெருநட்பும் உடைய பெருந்தகைப்புலவர் பல்கண்ணனார் பிறந்த ஊர். காஞ்சி நாட்டுத் தாமலே, (புறம் : 447) நற்றிணை 306, குறுந் தொகை 155 , நெடுந்தொகை 23, 95,191 ஆகிய பாடல்களைப் பாடிய கந்தரத்தனார், பிறந்த ஊரும் காஞ்சி நாட்டு உரோடகமே.

ஆக, வேங்கடத்தை அடுத்த காஞ்சிமண்டலம் தமிழ் வழங்கிய மண், தன்மொழிப் பெயராம், காஞ்சி, கச்சி மாநகர்களை, இருபெரும் தலைநகர்களாகக் கொண்டிருந்த பழம் பெருமை வாய்ந்தது என்பது தெற்றெனத் தெளிவாக்கப்பட்டது.

காஞ்சியும், கச்சியும் .தொண்டை நாட்டுத் தலைநகர்களாக இல்லையாயினும், பெருநகரங்களாக இருந்தன என்பது உண்மையாயின், அத் தொண்டை நாட்டுப் பல்வேறு பகுதிகளையும், பல்வளங்களையும் பாடிய பெரும்பாணாற்றுப் படை ஆசிரியர், தம்முடைய நெடிய பாட்டில், காஞ்சியைக் குறிப்பிடாமல், கச்சியை மட்டும் குறிப்பிட்டிருப்பது ஏன் ? அவர், அது குறிப்பிடாமை, காஞ்சி இன்மையை உறுதி செய்வதாகக் கோடல் கூடாதோ என்ற கேள்வி எழல் கூடும். கேள்வி, விடையிறுக்க வேண்டிய முக்கிய கேள்விதான்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பாக்களால் அறியப்படும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் உள்ளிட்ட பாண்டிய அரசர்களைப் புகழ்ந்துபாடும் புலவர்களுள், மாங்குடி மருதன் தவிர்த்த அனைத்துப் புலவர்களும், அப்பாண்டிய அரசர்களோடு, அப்பாண்டியர் தலைநகரை இணைத்துப் பாடும்போது, மதுரையைக் கூறாமல், கூடலையே கூறியுள்ளனர். பாண்டியர் தலைநகரைக் குறிப்பிடும்