பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

535

பாடல்கள், நற்றிணையில் இரண்டு (39, 298) அகத்தில் ஐந்து (93,116,353,296,315) புறத்தில் ஒன்று (88).

நெடுநல்வாடை-மூலம், செழியன் புகழ்பாடும் நக்கீரரும், அப்பாட்டில், மதுரை கூடல் என்ற இரண்டில் எந்த ஒரு பெயரையும் குறிப்பிடவில்லை எனினும், அவன் புகழ்பாடும் அகநானூற்றுப்பாடல் ஒன்றில் “நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் பொன்மலி நெடுநகர் கூடல்” (213) எனக் கூடலை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

மதுரைக்காஞ்சி மூலம், நெடுஞ்செழியன் புகழ்பாடும் மாங்குடி மருதனார், அப்பாட்டில் 699 ஆம் வரியில் மதுரையைக் குறிப்பிட்டுள்ளார் என்றாலும், அது குறிப்பிடுவதன் முன்னர், 429 ஆம் வரியில், மாடம் பிறங்கிய மலிபுகழ் கூடல் எனக் கூறி, கூடலுக்கே முதல் இடம் தந்துள்ளார்.

பாண்டியர் தலைநகர்க்கு, மதுரை, கூடல் என்ற இரு பெயர்கள் இருக்கவும், பாண்டியர் புகழ்பாடும் புலவர் பலரும், கூடலுக்கே முதல் இடம் தந்து குறிப்பிடுவதுபோல் வேங்கடம் அடுத்த தொண்டைநாட்டுத் தலைநகர்க்கு காஞ்சி, கச்சி என்ற இரண்டு பெயர்கள் இருக்கவும், அக்காஞ்சி நாடு பாடிய புலவர், பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர், காஞ்சியைக் குறிப்பிடாமல், கச்சியை மட்டும் குறிப்பிட்டுள்ளார் எனக் கொண்டால், அவ்வாறுதான் கொள்ள வேண்டும், அப்பகுதி, தமிழ் அரசர்களால் ஆளப்படவில்லை என்பதற்கு, அப்பகுதி தலைநகர்க்குத் தமிழ்ப் பெயர் இடப்படவில்லை என்பதைக் காரணமாகக் காட்டும் வாதம், பொருளற்ற வாதமாகப் போய்விடுவது காண்க.

வேதகாலம் கி. மு. 3000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்டது என்பது, திருவாளர் அய்யங்கார் அவர்கள் முடிவு ; தமிழர் வரலாறு : முன்னுரை ; பத்தி 7. காண்க. அவ்வேத காலத்தில், அணி நலம் குறித்து, வட ஆரியர்கள், பயன்படுத்தப்பட்ட பொருள்களுள், தென்கோடி விளைபொருளாம்