பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540

தமிழர் வரலாறு


வெளியிடப்பட்ட, தென்னிந்திய பண்டைவரலாற்றில் காஞ்சீபுரம் (Kancheepuram in Early South Indian History) என்ற தம் நூலில், காஞ்சீபுரம், அதன் தொடக்கம்: (Kancheepuram its begining) என்ற முதல் அதிகாரத்தில் பக்கம் 9ல் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், காஞ்சியில: நிலை குறித்து, திரு. டான்கொள என்ற சீன எழுத்தாளர் கூறிய இதே நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார்.

1939ஆம் ஆண்டில், அதாவது திருவாளர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள். 'தமிழர் வரலாறு' என்ற தம்முடை. நூலை வெளியிட்ட பத்து ஆண்டுகள் கழித்து, வெளியிடப்பட்ட திருவாளர், நீலகண்ட சாஸ்திரியார் அவர்களின் 'தென்னிந்தியா பற்றிய வெளிநாட்டவர் குறிப்புக்கள்' என்று, நூலையோ, திருவாளர். தே. வை. மகாலிங்கம் அவர்களில் நூலையோ திருவாளர் அய்யங்கார் அவர்கள் பார்த்திருக்கி: வாய்ப்பு இல்லை. ஆகவே தான், 'காஞ்சி' என்பது, தமிழ்ச் சொல் அன்று, 'காஞ்சீபுரக' என்ற சமஸ்கிருதச் சொல்லின் சுருங்கிய வடிவம்: அதன் தமிழாக்கமே கச்சி என்றும் காஞ்சிமண்டலம் தமிழரசர்களால் ஆளப்படவில்லை; மாறாக சமஸ்கிருத ராஜாக்களால் ஆளப்பட்டிருந்தது என்ற தவறான முடிவிற்குத் திருவாளர் அய்யங்கார் அவர்கள் தள்ளப் பட்டுள்ளார்.