பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைக்காலத்தில்... வடஇந்தியத் தொடர்பு 39 அணிசெய்வதற்குத் தேவைப்பட்ட பெருங்குவியலான முத்துக் களைக் கொண்டு செல்வதற்கு ஏற்பவும், மக்களிடையே நிலவிய அதன் பிறப்புப் பற்றிய பழங்கருத்து ரிஷி நாடாம் வடநாட்டிற்கு, அப்பண்டத்தைத் தொடர்ந்து உடன் செல்வதற்கு ஏற்பவும், தேவையான மிகப்பெரிய போக்கு வரத்து, வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் இருந்திருக்க வேண்டும் என்பதை, நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். "க்ரட்னா’ என்ற சொல்லின் பிறப்பியல், ஆராய்வதற் குரியது மெலிந்து சிறுத்துப்போன எனும் பொருளுடையதான "க்ர்ஷ்' என்ற மூலத்திலிருந்து பிறந்த தாகத் தெரிகிறது. அது காற்றுக்கும், ஞாயிற்றுக்கும், ஞாயிற்று ஒளிக்கும் நீண்டகாலம் திறந்து போடப்படின், மற்ற நவரத்தினங்கள் போலல்லாமல், கெட்டுவிடும் காரணத்தால், அதற்கு, அப்பெயர் இடப்பட்டது போலும். இதுதான் அச்சொல்லின சரியான பிறப்பியல் என்றால் கிருஷ்ணா' என்ற பெயர் முத்துக்குப் பொருத்தமான கவிதைப் பெயராகும். அதன் பயனை நீண்டகாலம் உணர்ந்த தன் விளைவாக, அதற்கு, அப்பெயர் இடப்பட்டிருக்க வேண்டும். அதன் மற்றொரு சமஸ்கிருதப் பெயர் முக்தா'. இச்சொல் வேத இலக்கியங்களில் 'விமுக்தா' என்ற வடிவில், ஒரு முறை இடம் பெற்றுளது. ('யத் சமுத்ரொ அப்யக்ரன் தத் பர்ஜன் யொ வித்யுதா ஸஹ்ததொ ஹிரண்யயொ பின்துஸ்த தொகர்ப்ஹெர அஜாயத') (ரிக்வேதம் xlx : 30 : 5 : சத்விம்ஸ் பிராமணா : 6) திருவாளர்கள் மெக்டொனெல், கெய்த் ஆகியோரால் அது, சிப்பியுள் மறைக்கப்படுகிறது' என விளக்கம் அளிக்கின்றனர். (வேதங்களின் அட்டவணை 11 ll 304) தம்முடைய சமஸ்கிருதச் சொற்களின் அகர முதல சொற்பொருள் பட்டியலில், திருவாளர் மோனியர் வில்லியம்ஸ் அவர்களால் முக்தா சிப்பியிலிருந்து விடு விக்கப்படுகிறது’ எனும் பொருளுடையதாக்கப்படுகிறது. ஆனால், முத்து எனும் பொருள் உடையதான 'முத்தம்' என்ற தமிழ்ச் சொல்லைக் கடனாகப்பெற்றுச் சமஸ்கிருத