பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழர் வரலாறு

வடிவம் கொடுக்கப்பட்டதே முக்தா என்ற இச்சொல் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். -

அணி செய்யத் துணைபுரியும் ஒரு பொருளாக மட்டுமே, முத்தைப் பார்த்தவரும், சிப்பிகளுள் விழும் மழைத்துளிகளே முத்துக்களாக மாறுகின்றன என்ற, அடிப்படையில்லாத கதைகளைக் கேட்டவரும் ஆகிய மக்கள், வேதங்களில், முத்துகுறித்து எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைச் சிப்பியுள் கிடக்கும் முத்து , அது பிறக்கும் நாட்டில் அறிந்த ஒரு புலவர் பாடிய பாட்டில், காணப்படும். முதிர்வார். இப்பி முத்த வார் மணல் கதிர்விடும் மணி' - (புறம் : 53 : 1 - 2) என்ற பகுதியை (முதிர்ந்த நீண்ட சிப்பியில், விளையும் முத்துக்கள் போலும், அறவிட்டுக் கிடக்கும் மணல் மீது ஒளி வீசும் நவமணிகள் கிடக்கின்றன. ஒப்பிடுவது சுவையானது. புறம் : 377, 'கடல் பயந்த கதிர் முத்தம்' குறித்துப் பேசுகிறது. பெரும்பாணாற்றுப் படை (335) 'முத்தவார் மணல்’ (முத்துக்கள் பரந்து கிடக்கு மணல்) குறித்துப் பேசுகிறது. பொன்னும் வைரமும்:

முத்துக்கள் மட்டுமல்லாமல், வேறுபல தென்னிந்தியப் பொருட்களும், ஆரியவர்த்தத்தில், மிகவும் வேண்டப் பட்டன. அவை, வேறு பல பொருள்களோடு, பொன்னும், வைரமும் ஆம். வேத காலத்தில், அணிகள் செய்வதற்கும், நாணயங்கள் செய்வதற்கும் ஏராளமான பொன் பயன் பயன்படுத்தப்பட்டது. திருவாளர்கள், மெக்டொனெல், மற்றும் கெய்த் அவர்களின் வேத அட்டவணையில், பின் வருமாறு கூறப்பட்டுள்ளது: "வேதகால இ ந் தி ய ர் , பொன்னுக்கு நிர்ணயித்த விலையை மிகைப்படுத்துவது, எளிதில் முடியக்கூடியதன்று ... புரவலர்களால் வழங்கப்பட்ட பொற்களஞ்சியங்கள் (ஹிரண்யாநி) குறிப்பிடப்பட்டுள்ளன: ...கழுத்து அணிகளுக்காகவும், மார்புஅணிகளுக்காகவும் 'நிஷ்க காதணிகளுக்காகவும், (கர்ண லோபன) மற்றும் குடிகலனாம் கிண்ணங்களுக்காகவும், பொன் பயன்படுத்தப் பட்டது. பொன்னின் தெளிவான எடையளவுகள் குறிப்பிடப் பட்டுள்ளமையால், பொன் நாணயச்செலாவணி, உறுதியாக