பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துண்டைக் காலத்தில்...வடஇந்தியத் தொடர்பு 4 Í அறியத் தலைப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறே அஷ்டாப் ரூட் என்ற ஓர் எடை, சமிதாக்களில் இடம் பெற்றுள்ளது: நூறு கிருஷ்ணலம்' எடை பொன் கொண்டதான, சதமானம்’ என்ற எடைச்சொல், அதே மூலத்தில் காணப் படுகிறது." - - ரிஷிகள் காலத்தில், ஹிரண்யபிண்டம்", நிஸ்க்' என்ற, முறையே, முத்திரையிட்ட, முத்திரையிடாத, இரண்டு வகை உலோக நாணயங்கள் இருந்தன என்பதைத், திருவாளர், டி. ஆர். பண்டர்கர் அவர்கள், ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளார். 12 ஆகவே, வடஇந்தியர் களால், சிந்து நதியின் மணலைக் கழுவிப்பெற்ற பொன் தூள்கள், இக்காரியங்களுக்குப் போதுமானவை ஆகா . இவ்வகைப் பொன், அப்பொன் துாள்களின் வடிவளவிலிருந்து கொள்ளப்பட்ட, எறும்பு போன்றவை எனும் பொருள் உடையதான பி பீலிகம்' என அழைக்கப்பட்டது. ஆகவே, வடஇந்தியர்கள், அதைப் பொன் சுரங்கங்களிலிருந்தும் இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. நாம் அறிந்த வகை யில், நமக்குத் தெரிந்த முக்கியமான பொன்னெடுக்கும் பழைய (சுரங்கங்கள்) இடங்கள், தென் இந்தியாவைச் சேர்ந்தனவே; ஆகவே,தென்னிந்தியப் பொன்னே, ஆரிய வார்த்தத்தில் பயன் பட்டது என்பது, இயல்பாக நிகழக்கூடியதே. தக்கிணா பதத்தில் பெருமளவில் கிடைத்த முத்தின் தாய் உட்பட, அனைத்து வகைச் சங்குகள், நவமணிகள், மற்றும் விலையுயர்ந்த மணிக்கற்கள், முத்து, பொன் போலும் பொருள்களினாலான வ ணரி க ம் , கி. மு. நான்காம் நூற்றாண்டில், தென்னிந்தியாவுக்கும், வடஇந்தியாவுக்கும் இடையில், வளமாக நடைபெற்றிருந்தது என்ற உண்மை நிகழ்ச்சிக்குக் கெளடல்யரின் அர்த்தசாஸ்திரத்தில், அகச் சான்றுகள் உள்ளன.." மெளரிய காலத்துக்கு முந்திய காலத்து மக்கள் இப்பொருட்களை, உலகின் பிற பகுதிகளிலிருந்து முதன் முதலாகப் பெற்றிருக்க இயலாது; ஆகவே, இது வேதகாலத்து. வாணிகத்தின் வளர்ச்சியும், தொடர்ச்சியுமேயல்லது, மெளரிய