பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத்தில்...வடஇந்தியத் தொடர்பு 43 களாகவும் உருவங்களாகவும் செய்வது, பெனாரஸ் நகர மக்களின் தொழிலாகக் கூறப்படுகிறது. இக்கதை. ஜாதகக். கதைகளுள் இடம் பெறுவதற்கு முற்பட்டு, (கி. மு. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில்) அத்தொழில், உண்மையில், புதிய தொழிலே அன்று. ஆக அக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து வடஇந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மற்றொரு பொருள் தந்தம். பணியர் :- வேதவழிபாட்டுப் பாடல்களில் பல இடங்களில் குறிப்பிடப்படும் பணிகள் என்ற சொல், இவ்வணிகப் பண்டங் களை, ஆரியர்களுக்குக் கொண்டுசென்ற வணிகர்களாவர் எனப் பல இடங்களில் வாதிட்டுள்ளேன்?" இதில் திருவாளர்கள் கிரிப்த் (griffith) மெக்டொனெல் (Macdonell). போன்ற ஐரோப்பிய ஆசிரியர்களால் தப்புவழி காட்டப்பட்டுத் தவறு செய்துவிட்டதாக அறிகிறேன். பணி எனும் அச்சொல் இடம் பெறும் மந்திரங்களை நுணுக்கமாக, விழிப் போடு, மறு ஆய்வு செய்தால், அவர்கள் வணிகர்களோ, அல்லது கார்மேகங்களைக் களவாடி, மழையினைத் தடுத்து விடுவதாகக் கூறப்படும் காற்றுப் பேய்களோ அல்லர்; மாறாக ஆரியர்களை எதிர்த்து வந்த, பல்வேறு தஸ்யூ இனத்தவருள் ஒருவராவர் என்பதைக் கண்டுகொண்டேன். அவர்கள், வணிகரும் அல்லர், பேயும் அல்லர்: குதிரைகளும், ஆனிரைகளுமாகக் கால்நடைச் செல்வங்களைக் குவித்து வைத்திருக்கும் உழவர்களாவர்." 1

     அவர்களின் செல்வமாம் கால்நடைகள், மலைக் குகைகளில் வைக்கப்பட்டிருக்கும். "அச்சொல், தீக்கொழுந்துகளைக் கக்கும் கொள்ளிவாய்ப் பேய்கள் எனப் பிழையாகக் கொள்ளப்பட்டது. ஆரியர், திராவிடர் ஆகிய இருவரிடையேயும், பலரும் அறிய இருந்த, பழைய பழக்க வழக்கங்களை அறியாத காரணத்தால் நேர்ந்த, தவறான பொருள்கோள் அது மிகப் பழைய இந்தியப் பழக்க