பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழர் வரலாறு

ஒரு மகாவீரன்: அவன், சாம்ராட் மற்றும் சக்ரவர்த்தி என்ற இருபெயர்களும் சூட்டி அழைக்கப்பட்டவன். அவன் அய்அய {Haihaya) குலத்து ஆட்சியை, நீண்டகாலம் வரை உச்ச நிலையில் வைத்திருந்தான். அத்துடன் வட இந்தியா முழுவதையும் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வருதல் பொருட்டு, தக்கண பாதத்தைச் சேர்ந்த, பெரிய தஸ்யூஇனத்துக் கார்க் கோடக நாகரிடமிருந்து மாகிஸ்மதியைக் கைப்பற்றி, அதைத் தன்னுடைய படைக்கலத் தலைநகராக்கினான்."27

அவனால் வெற்றி கொள்ளப்பட்ட ஏனையோரில், இலங்கை அரசன் இராவணனும் ஒருவன். அவனை மாகிஸ் மதியில் சிறைவைத்தான் என்றெல்லாம் அறிகிறோம். 28

இந்த இராவணன்,குறைந்தது ஐந்நூறுஆண்டுகள் கழித்து வாழ்ந்த, இராமச்சந்திரனின் பகைவனாகிய இராவணன் அல்லன் என்பது உறுதி. ஆகவே, கார்ந்த வீரியனால் சிறை செய்யப்பட்ட இராவணன், அப்பெயரே கொண்ட இராமர் காலத்து இராவணனுக்குப் பல ஆண்டுகாலம் முன்னர் வாழ்ந் திருந்த ஓர் அரசனாக வேண்டும்; அல்லது, ராவணா என்பது, இறைவன் என்ற தமிழ்ச் சொல்லைச் சமஸ்கிருதப் படுத்தியதன் வடிவம் அல்லது வேறு இல்லை. ஆகவே அது ஒரு தமிழரசன் எனும் பொருள் உணர்த்தும், இறைவன் என்பதன் திரிபாம் என்று டாக்டர் ஸ்டென் கொனொவ் (Dr. Sten konow) அவர்களின் யூகம் உண்மையாதல் வேண்டும். 29

இந்த அர்ச்சுனன், அல்லது அவனுடைய மகன்கள், பார்கவ முனிவர் சம தக்கினியின் ஆசிரமத்தைச் சூறையாடி, அவரையும் அவமானம் செய்து, அவருடைய பசுங்கன்றைக் கொண்டு சென்றனர். சமதக் கினியின் மகன், வெலற்கரிய பேராற்றல்வாய்ந்த இராமன், அவர்கள் மீது போர் தொடுத்து, அவர்களில் பலரையும், ஹய்ஹய குலத்தவரையும் அழித்தான். இராமனும், பார்கவர்களும் அவர்களோடு திருமண முறையால் உறவினர்களான, அயோத்தியா மற்றும் காண்ய குப்ஜ சிற்றரசர்களால் ஆதரிக்கப்பட்டனர். 30