பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைக்காலத்தில்...வட இந்தியத் தொடர்பு

அரசர்கள் வேதமந்திர இருடிகள் வளமுற வாழ்ந்திருந்த காலத்தில், அதாவது, இக்கூஷவாகு காலம் முதல், மகாபாரதப் போர்வரை (என்னுடைய, பழைய இலக்கியக் காலவரிசைப் படி, கி. மு. 3000 முதல் 1400 வரை) விந்தியத்திற்கு வடக்கில் உள்ள நாடுகள் வரையிலேயே, தங்கள் நாட்டாசைகளை அடக்கிக் கொண்டனர் என்ற தப்பான முடிவுகளை, வரலாற்று ஆசிரியர்கள் கொள்ள, ஆரிய வர்த்தத்தின் புதினத் தன்மையும், தப்புவழி காட்டி விட்டது. திருவாளர் டி. ஆர். பந்தர்கார் அவர்கள் இந்தியாவின் வடபாதியிலிருந்து தென் இந்தியாவைப் பிரிக்கும் விந்தியமலையை, ஆரியர்கள், அய்த்ரேயபிராமணா காலத்தில்தான் முதன் முதலாகக் கடந்தனர் ; உதாரணத்திற்கு :- அய்த்ரேய பிராமணத்தில், பீமா என்ற இளவரசன், வைதர்ப்பா என்ற பெயரில், வைதர்ப்ப நாட்டின் இளவரசனாக முடிசூட்டப்பட்டுள்ளான். இது ஆரியர்கள், விந்தியத்தின் அடிவாரத்திற்கு வந்து, விதர்ப்பம் அல்லது விந்திய மலைத் தொடர்க்கு மிக அணித்தாகத், தெற்கில் உள்ள, மேற்குப் பேராறில் குடியேறினர்34 எனக் கூறுகிறார். வரலாறு பற்றிய ஆய்வில் திறனாய்வு முறையினைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான, ஒரு முன் மாதிரி, இது. பீம வைதர்ப்ப என்ற பெயரை, அய்த்ரேய பிராமணா குறிப்பிட, இருக்குவேத மந்திரங்கள் குறிப்பிடாமையால், ஆரிய அரசர், அப்போது தான் விந்தியத்தைக் கடந்துள்ளனர்! அய்த்ரேய பிராமணா இயற்றப்படுவதற்கு ஒராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பீமா வாழ்ந்திருக்க வேண்டும் ; ஆனால், அந்நூல் அவனைக் குறிப்பிடும் இப்போது தான், அவன் விந்தியத்தைக் கடந்துள்ளான் இட்சு வாகுவும், புருவர்களும் முறையே, சூரிய, சந்திர அரச குலங் களைக் கண்டுபிடித்த காலம்தொட்டு, தொண்ணுறு முதல், நூறு வரையான, அரச தலைமுறைகள் கழிந்து போகும் வரையான கால வெள்ளத்தில் மிதந்து வந்த, பழைய காது வழிச் செய்திகளையெல்லாம் பதிவு செய்துள்ளது, அய்த்ரேய பிராமணா: ஆகவே, அந்நூல்களில், ஒருவனைப் பற்றிக்

த. வ.-4