பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைக்காலத்தில் ... வட இந்தியத் தொடர்பு

விதர்ப்பம், தெற்குக் கோசலம் மற்றும், பல நாட்டு அரசர் களைப் பற்றிய சுவையான விளக்கங்கள், மகாபாரத நளோபாக்கியானத்தில் கூறப்பட்டுள்ளன. புராணங்களில் ச்ைதைய நாட்டு அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். முட்கல நாட்டு அரசன் மனைவி, இந்திரசேனை என்பாள், தன் கணவன், தஸ்யூக்களோடு நடத்திய போரில், அவன் தேரை ஒட்டினாள், அவள் தேரோட்டுவதில் புகழ் பெற்ற நளனுடைய மகளாதலின், அவள், அது செய்ததில் வியப்பில்லை. (மகாபாரதம் , 3. 114 : 24) நளனுடைய நண்பன் ருதுபர்ணன், தக்கண கோசலத்து அரசனாவன், விதர்ப்பம். அதை ஒட்டியுள்ள நாடு. ஆகவே, தக்கண பாதத்தின் ஒரு பகுதி. இராமர் காலத்திற்கு வெகு காலத் திற்கு முன்பே, ஆரிய அரசர்களால் கைப்பற்றப்பட்டது. இக்கால அளவில், முந்திய அதிகாரத்தில் விளக்கிக் கூறியவாறு; தமிழ் இந்திய மக்கள். அவரவர்க்குரிய திணை நிலங்களில் வாழ்க்கையை வளர்த்துக் கொண்டிருந்தனர் : வடஇந்திய மக்களோடு வாணிகம் செய்து வந்தனர். ஆனால், ஆரிய வர்த்தத்தின் தீவழிபாட்டு நாகரீகம், இக்காலத்தில், விந்தியமலைக்கு அப்பாலும், மெல்ல, மெல்ல நுழைய லாயிற்று என்றாலும், வடவர்களால், தஸ்யூ நாகரீகம் என அழைக்கப்பட்ட தமிழர் நாகரீகம், அவ்வாரிய வர்த்தத் தீவழிபாட்டினால் அடிமை கொள்ளப்படவில்லை. 1. Oxford History of India, page - I - III

2. Oxford History of India, page-14

3. Bhandarkar Carmichael Lectures: 1981. page:4-5
4. Bhandarkar Carmichael Lectures: page: 22

5, Bhandarkar carmichael Lecturas: page: 23 6. Vedic Index vo. 1 page 337 7. - Aitareya Brahmana: VII, 8. கௌஸ்ததி 11:12, 13