பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. மனு: 11:22, 24

10. தஷிண பாதா என்ற சொல் வடிவம்,தெற்கு எனும் பொருள் உணர்த்துவதான 'தஷிண' எனக் குறுக்கப்பட்டது. ப்ராகிருத மொழியில் தக்கிண' என வரும் இச்சொல், பிற்காலத்தில், விந்தியத்திற்குத் தெற்கில் உள்ள, இந்தியாவின் பெயராக இருந்த தக்கின்' என மாறிவிட்டது. முஸல்மான் வரலாற்று ஆசிரியர்களைத் தொடர்ந்து, ஆங்கிலேயர்களும் அச் சொல்லை "டெக்கான்' எனத் திரித்து, உணர்த்தும் பொருளையும் மாற்றி விட்டார்கள். தென்னிந்தியா பற்றிப் பேசும்போதெல்லாம், முனிவர்கள், பொதுவாகக் கருத்தில் கொள்ளும், கிருஷ்ணா ஆற்றிற்கும் தெற்கே உள்ள் தான, தென் இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு பகுதியை, டெக்கான் என்ற சொல் உணர்த்தும் பொருட்குறிப்பிலிருந்து நீக்கி விட்டு, பீடபூமியை மட்டுமே குறிப்பதாக, அதன் பொருளை வரையறுத்துக்கொண்டு, தென்கோடிப் பகுதியைக் குறிக்க "பார்செளத்' (Farsowth) என்ற தொடரை வரவழைத்துக் கொண்டனர்.

11. Vedic index: II - 504-5. . 12, Carmichael Lectures: 1921 page: 56-75

'13. கழுவிப் பொன் கொள்ளுதல், தயிக் சமிதத்தில்: Vi :7; 1; பதிவு செய்யப்பட்டுள்ளது. சிந்து நதி, 'பொன் மயமான' என்றும், 'பொன் அருவி' என்றும் கூறப்பட்டுள்ளது. ரிக்வேதம் x 75, 8: VI: 61 : 7; VIII : 26: 78 Ved. ind : ||: 504-5

14. மண்ணுக்கடியிலிருந்து எறும்புகளாள் மேலுக்குக் கொண்டு வரப்பட்டு, அதனால், அதன் பெயரால் அழைக்கப்படும் பொன், யுதிஷ்டிரர்க்குத் திறைப் பொருளாகக் கொண்டுவரப்பட்டது என மகாபாரதம் (11 1860) கூறுகிறது. கிரேக்க எழுத்தாளர் மெகஸ்தனிஸ் அவர்கள், சிறிதே புராணத் தன்மை வாய்ந்த் இச்சிறு கதையை, ஒரு பெரிய கதையாக மாற்றிவிட்டார் கிழக்கு எல்லையில், 8000 ஸ்டேடியா' சுற்றளவுள்ள உயர்ந்த மேடு ஒன்று உளது. அம்மண்ணுக்கடியில், பொன் சுரங்கங்கள் உள்ளன. அதற் கேற்ப பொன்னைத் தோண்டும் எறும்புகளும் காணப்படுகின்றன. அவை, கொடிய காட்டு நரிகளுக்கு வடிவால் தாழ்ந்தவைகளல்ல' அவை வியத்தகு வேகத்தில் ஒடுகின்றன ; வேட்டைப் பொருள்மீது வாழ்கின்றன. அவை தோண்டும் காலம், மாரிக் காலம்; அவை, சுண்டெலிகளைப் போலவே சுரங்க வாய்களில் மண் மேட்டை: குவிக்கின்றன. பொன் தூள்கள், கொதிக்குச் சிறிது ஆளாக்கப் பட வேண்டியும் உளது. அண்டை அயவில், உள்ள மக்கள் பொதி