பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழர் வரலாறு

களின் இனச் சார்பு வாய்ந்த, மாதிரிப் படிவங்களும், அவர் களைச் சுற்றி வாழ்ந்திருந்த இனத்தவரின் மாதிரிப் படிவங் களிலிருந்து வேறுபடுகின்றன. ஐயத்திற்கு இடன் இன்றி, உறுதியாக மாதிரிப் படிவத்தில், அவை இந்திய இயல்புடை யவே. இன்றைய சராசரி இந்தியன் ஒருவனுடைய முக அமைப்பு ஒரு சிறிது ஐயத்திற்கும் இடமில்லாமல், முழுக்க முழுக்க ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவராய, அவனுடைய திராவிட முன்னேர்களின் முக அமைப்பேதான். திராவிடரை வெற்றிகொண்ட ஆரியர்களின் முகஅமைப்பு, இன்றைய கிரேக்கர் அல்லது இத்தாலியரிடையே உள்ளது போலவே, இன்றைய இந்தியர்களிடையேயும், நாகரீக வளர்ச்சிக்கு முற்பட்ட காலத்து முக அமைப்பின் இயல்பு போலவே, பண்டைய ஆரியருக்கு முந்தியதான முக அமைப்பு அழியாமல் அப்படியே உளது. பழைய சுமேரியரின் நினைவுச் சின்னங் களிலிருந்து நாம் மதிப்பிடுவது போலவே இந்தியாவின், இத்தகு திராவிட இனச் சார்பான உருவ அமைப்போடுதான், சுமேரியன், முழு ஒருமைப்பாட்டினைக் கொண்டுள்ளான். திராவிட மொழிகளை, இன்றும் வழங்கும் தென்னாட்டு இந்துவை, அவன் பெரிதும் ஒத்துள்ளான் நிலவழியாக, ஒருவேளை, கடல் வழியாகவும், பர்ஷியாவின் ஊடே, அந்த இரண்டு ஆறுகளும் ஒடும் பள்ளத்தாக்கிற்குச் சென்ற இந்தியப் பழங்குடியைச் சேர்ந்தவர்தாம், சுமேரியர் என்பது, எவ்வகையிலும், நம்பக்கூடாத ஒன்று அன்று. (இவ்வாக்கியத் தில் வரும் "நிலம்" "கடல்" என்ற சொற்கள் குறித்த அடிக் குறிப்பில், அவர் 'பலுஜிஸ்தானத்தில், பிராஹீகி என்ற திராவிட இனமக்களை இன்று நாம் பெற்றுள்ளோம். திராவிட இனத்தவர் போன்றவர், தென் பர்ஷியாவில் காணப்படு கின்றனர். பாபிலோனியாவையும் இந்தியாவையும் இணைக்கும் இணைப்பாகச் செயல்பட்ட, பழைய பர்ஷியாவின், ஆரிய ரல்லாத மக்கள் (கிரேக்க மக்கள் இனத்தைச் சேர்ந்த அனரியகோயி), அதே இனத்தைச் சேர்ந்தவர்தாம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. திருவாளர் பெரோசுஸ் அவர் களால் எடுத்துக்காட்டப் பெற்ற மனித மீனாகிய கேனெஸ்' பற்றிய பழங்கதை, கடலுக்கு அப்பாற்பட்ட, நாகரீகம்