பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழர் வரலாறு

  • வெட்டுக் குழிகள் செம்பெரடுகள் இணைந்த கட்டுமான காலத்தைச் சேர்ந்த, இடையீடின்றித் தொடர்ந்த பல அடுக்குக் கட்டிடங்கள் இருந்ததை வெளிப்படுத்துகின்றன". கரடு முரடான திருந்தா வேலைப்பாடும், தொன்மையை வெளிப்படுத்தும் தோற்றமும் வாய்ந்த சில உருவங்கள் மொகஞ்சோ-தரோவில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், "எடுப்பான மூக்கு, கண்களுக்குக் களிமண்ணாலான தட்டிய சிறுகுண்டுகளைப் பொருத்துவது ஆகிய இவை, மெஸபடோமி யாவில் மிகப் பழைய காலத்தைச் சேர்ந்த இவைபோலும் உருவங்களின் தனிச்சிறப்பு ஆகும்”* சிந்துவெளிப் பழம் நாகரீகத்தின் வடிகாலே, சுமேரிய நாகரீகம் என்பதற்கான தெளிவான அகச் சான்றுகளாம். இக் கண்டுபிடிப்புகளே அல்லாமல் இவைபோலும் பல கண்டுபிடிப்புகள் மொகஞ்சோதரோவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள் முடிவாகப் படிக்கப்பட்டுப் பொருளுணரப்பட்டபோதே கிடைக்கும்.

பாபிலோனியாவுடன் பண்டை வாணிகம் :

  சிந்துவெளிப் பள்ளத்தாக்கிற்கும், சுமேரியாவுக்கும் இடையில் போக்குவரவுத் தொடர்பு இருந்திருக்குமே யானால், அதைவிடப் பெரிய அளவிலான போக்குவரத்துத் தொடர்பு இவ்விரு நாடுகளுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையில் இருந்திருக்க வேண்டும், இதற்கான அகச் .சான்றுகள் திருவாளர் சாய்ஸி அவர்கள் குறிப்பிடும் இரு உண் மைகளில் காணப்படுகின்றன. ஒன்று, கி. மு. 4000 ஆண்டில், சுமேரிய மன்னர்களின் தலைமை இடமாம் ஊர் (முகையீர்) நகரின் அழிபாடுகளில், இந்தியத் தேக்கு மரங்கள் காணப் பட்டன என்பது மற்றொன்று, மெல்லிய ஆடையைக் குறிக்கும் 'சிந்து' என்ற சொல், பழைய பாபிலோனியன், உடைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது (Sayce: Hibbert Lectures P.P. 136-138)இச்சொல்லின் "எஸ்" என்ற எழுத்து மறையாமல் இடம் பெற்றிருப்பது, சிந்து என்ப்படும்.அம் மெல்லிய ஆடை, மெஸபடோமியர்வுக்குப் பர்ஷியா வழியாகச் செல்லவில்லை என்பதை உறுதி செய்