பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடக்க காலத்தில் வெளிநாட்டு வாணிகம் 63. பொருளிட்ட விரும்பிக் கப்பல்களைக் கடலில் போக்கினர். வணிகக் குழுக்கள் விற்பனைக்காகவும் பண்டமாற்றிற்காகவும் நூறு துடுப்புகளைக்கொண்ட கப்பல்களில் கடல்மேல் சென்றனர். இது தமிழர் வாணிகத்தைக் குறிக்கவில்லை என்பது உண்மையாகலாம். ஆனால் தமிழர்கள் தொடக்க, காலத்திலிருந்தே மிகப் பெரிய கடல் வாணிகத்தை வளர்த்து வந்திருந்தனர் ஆதலாலும், வட நாட்டு ஆரியர் இத் தொடக்க காலத்தில் மாலுமித் தொழில் தெரிந்தவரல்லர் ஆதலாலும், அவ்வடநாட்டு ஆரியர் தொலை நாடுகளுக்குச் சென்று வாணிகம் புரிந்து வந்தனர் என்றால் தென்னிந்திய மாலுமிகளே அவர்களுக்கு அத்துறையில் ஆசிரியர்களாதல் வேண்டும். பண்டை வாணிகம் குறித்துத் திருவாளர் கென்னடி சில வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாணிகம் இருந்தமைக்கு, எதிராக வாதிடவும் செய்துள்ளனர். அவர்களுள் தலையாயவர் திருவாளர் கென்னடி.அப்பொருள் பற்றிய தம்முடைய கட்டுரை ஒன்றில் எகிப்துடனோ அல்லது. அஸிரியாவுடனோ, கி. மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர் இந்திய வாணிகம் இருந்தது என்பதை மறுப்பதற்தாகத் தம்முடைய பரந்த கல்வியால் பெற்ற அத்துணை ஆதாரங்களையும் செலவிட்டுள்ளார். வணிகர்கள் கடல் பயணம்,கடலில் கலம் கவிழ்ந்து போதல் ஆகியனவற்றைக் குறிப்பிடும். ரிக்வேத,அதர்வவேத மந்திரப் பகுதிகளை அவர் அறவே புறக் கணித்துள்ளார். ஆனால் இந்தியமக்கள் சிறப்பாகக் கடற் கரையை அடுத்து வாழ்மக்கள் கடல் வாழ்க்கையில் பழகி விட்டவர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். கட்டிடப்பணிக்குத் தேவைப்படும் உறுதிவாய்ந்த மரங்களையும், பழங் காலத்தில் தெய்வ வழிபாடுகளின் போது மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்ட நறுமணத்தைலங்களை வடிக்க உதவும் இனிய மணம் கமழும் மரங்களையும் இந்தியா பெருமளவில் உற்பத்தி செய்தது என்பதை அவரால் மறுக்க இயலாது. எகிப்தியர்களும் அஸி ரியர்களும், இந்தியா பெருமளவில்