பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மொழி பெயர்ப்பாளர் முன்னுரை

சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் பணியாற்றிய திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தமிழர் வரலாறு (History of Tamils) என்ற நூல் கி.பி. 600 வரையான வரையான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றினை விளக்கும் அரிய நூலாகும்.

இந்தியாவின் வடகோடி ஒரு மூலையில் பேசப்படும் பிராஹுயி (Brahui) என்ற மொழியில், தமிழ்ச் சொற்களோடு ஒரு சார் உறவுடையதான சில சொற்கள் இடம் பெற்றிருக்கும் உண்மையிலிருந்து தமிழ், அல்லது அதனோடு உறவுடைய ஒரு மொழி. ஒரு காலத்தில் அவ் வடகிழக்கு இந்தியா வரையும் பேசப்பட்டது என்ற முடிவே முறையாகக் கொள்ளப்பட வேண்டியதாகும். அந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, திராவிட முன்னோர்களை இந்தியாவின் வடமேற்கு அல்லது வடகிழக்குக் கணவாய் வழியாக வழி நடத்திக் கொண்டு வந்து, எடுத்த எடுப்பிலேயே திடுமென, முழுமை பெற்று விட்ட நாகரீகத்தினராகக், காவிரி அல்லது வைகைக் கரையில் குடியமர்த்தும் ஒரு சில வரலாற்று ஆசிரியர்களின் செயலை உண்மையாகக் கண்டிப்பதோடு எள்ளி நகையாடியிருப்பதன் மூலம் (பக்கம் 2) தமிழ் மொழியின் பெருமைக்கு வைர முடிசூட்டி விழாக் கொண்டாடியுள்ளார் அந்நூலில்.

Some writers conduct the ancient “Dravidian” with self confidence cook's guide, through the North Western of North-Eastern mountain passes of India,”—and drop them with a ready-made foreign culture on the banks of the Kaviri or the Vaigai. The Slender evidence on which they rely for this elaborate theorizing is the fast that Brahui, a dilect