பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம்: IV

   இராமனும்தென்இந்தியாவும்(கி.மு2000)

இராமாயண வளர்ச்சி :

      தென்னிந்தியா முழுவதையும், மக்கள் கவனத்திற்கு, நிச்சயமாக, இராமகாதைதான் முதன் முதலில் கொண்டுவந்தது.மகாபாரதம்,

இரகுவம்சம்,மற்றும்பிறநூல்களில்,இரமகாதைபற்றிய, பெரும்பாலும் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத நிகழ்ச்சிக் குறிப்புகள் பல இடம் பெற்றிருந்தாலும் இராமாயணத்தில்தான், அக்கதை, முழுமையாக, விளங்க உரைக்கப்பட்டுள்ளது. இராமாயணம் அளிக்கும் அகச்சான்றுகள், பல்வேறு காரணங்களால் மிகவும் விழிப்போடு ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இராமன் சமகாலத்தவரான ஒரு முனிவரும், மருட்சியுள்ள மன நிலையில், கணவனால் துரத்தப்பட்ட சீதைக்குப், புகலிடம் அளித்து அவள் ம க ன் க ளு க் கு க் கல்வி அறிவு புகட்டி, தாங்கள் கல்வி பெற்று வளர்ந்து வந்த ஆசிரமத்திற்குத் தங்கள் தந்தை வந்தபோது, அத்தந்தைக்கு எந்தப் பாக்களிலிருந்து சில பாடிக் காட்டினார்களோ, வந்தப் பாடல்களை அவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்தவருமாகிய வால்மீகியின் நூலாக, அது உரிமை கொண்டாடுகிறது. ஒரு வகையில், அறிந்த நிகழ்ச்சிகளிலிருந்து பெறலாகும் உண்மைகளால் உறுதிப்படுத்தப்படுவதல்லது, வேறு வகையில் உறுதி செய்ய இயலாதனவாய இராமாயணம் அளிக்கும் செய்திகளை, நம்ப மறுக்குமாறு நம்மை வற்புறுத்தும் தனிக்காரணம் எதுவும் இல்லை. அதற்கு மாறாக நாம் இப்போது பெற்றிருக்கும் இராமாயணம், முழுக்க முழுக்க வால்மீகி இயற்றிய அதே இராமாயணந்தான் என்பதை நம்பவும் இயலாது. அதற்கு ஒரு காரணம், இராமன் வேத காலத்தின் முக்கூற்றில், இரண்டாம் கூற்றின் இறுதிக்