பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழர் வரலாறு

ஆண்டுகள் நேர்மையாக அரசு புரிந்து (த்ஹம்மென ரஜ்ஜன் கரெத்ப) ஸ்வர்க்கம் புகுந்தான்.

இக் கட்டுக்கதை, பொதுமக்களிடையே பெருவழக்காய் இருந்தது. பல பிறவிகளுக்குப் பிறகு கெளதமராகப் பிறந்த போதி சத்தராக, இராமரை மாற்றிய பெளத்தர்களால் வழிபடு பொருளாக ஆக்கப்பட்டது என்ற உண்மை, வால்மீகி கூறும் கதையமைப்பு, அக்காலப் பொதுமக்களில் ஒரு பிரிவினர்க்குத் தெரியவில்லை என்பதை உறுதி செய்கிறது. பாணினியின் சம காலத்தவரான வால்மீகியால், இனிமையோடு கலந்த அழகிய, அதே நிலையில் எளிய சமஸ்கிருதத்தில், இராமன் விட்ணுவின் அவதாரமாம் என்ற ஆகமக் கோட்பாட்டையும், இரண்டற இணைத்து ஆக்கப் பட்ட அவ்வீர காவியத்தின் மறு ஆக்கம், அப்பாட்டை வட இந்தியாவில் பக்தி மார்க்கம், பெருவழக்காய் ஆகிவிட்ட கி. மு. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு, பலரும் அறிந்த ஒன்றாக ஆக்கிவிட்டது. இது, வெறும் தத்துவந்தான். ஆனால், இஃது ஒன்றுதான் உண்மை நிகழ்ச்சிகளோடு ஒத்த தத்துவம். -

இராமாயணத்தில் தென்னிந்தியா பற்றிய குறிப்பீடுகள் :

மேலே கூறியனவற்றை ஒரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய புனைந்துரைகளாகக் கொண்டால், இராமர் காலத்தைச் சேர்ந்த கதையின், உயிர்நிலை போலும் முக்கியப் பகுதி களாகி, இராமாயணத்தில் இடம் பெற்றிருக்கும் தென் னிந்தியா பற்றிய குறிப்புகளைத், தம் காலத்திய தென்னிந்தியா பற்றிய சில செய்திகளை அறிந்தவரும் அறிந்தவற்றைக், கால முறையைக் கருத்தில் கொள்ளாது, முற்பட்ட நிகழ்ச்சிகளைப் பிற்பட்டனவாகவும், பிற்பட்ட நிகழ்ச்சிகளை முற்பட்டனவாகவும், தம் பாக்களிடையே நுழைத்து விட்டவருமாகிய, பிற்கால வால்மீகியால் கி.மு. முதலாயிரத் தாண்டில் நுழைக்கப்பட்ட நிகழ்ச்சிகளிலிருந்து வேறு பிரித்துக் காண நமக்கு வழிவகைகள் உள்ளன். இராமர் காலத்தில், அரக்கரின் ஆட்சி, அவர்களின் புறக்காவல்