பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 தமிழர் வரலாறு

என்ற முடிவின் மீது கட்டப்பட்ட, கருத்து மாடங்கள் அனைத்தும் அடியோடு சரிந்து மண்ணாகிப் போய்விடும்.

“There is an alternative reading to the word kayavagu in the passage of the silappadigaram, on which all this contention about the “Gajabahu synchronism'’ is based, That reading is “Kaval” insted of Kayavagu. If Kaval is the Correct reading, down falls to the ground all the edifice of the theories based on the “Gajabahu Synchronism”, (History of the Tamils, Page : 381) er sur sait கூறுவது காண்க;

தமிழக வரலாற்றுக் கால எல்லையை உறுதி செய்யும் ஒரே சான்றாகப் பாடபேதத்திற்கு உள்ளான ஒரு சொல்லை மேற்கொள்வது ஏற்புடையதாகாது என்பது அவர் வாதம்:

கயவாகு’, ‘காவல்’ இவ்விரண்டனுள் உண்மையான பாடம் எது? சிலப்பதிகாரப் பதிப்பாசிரியர் திரு. உ. வே. சாமி நாத அய்யர் அவர்களால், இப்பாடபேதம் குறிப்பிடப் பட்டிருப்பது வரந்தரு காதையில், கயவாகுவின் நிகழ்ச்சி, சிலப்பதிகாரத்தில், வரந்தரு காதையில் மட்டுமல்லாமல், உரைபெறு கட்டுரையிலும் இடம் பெற்றுளது. அதுகூறும் அவ்வுரை பெறு கட்டுரையில், அவன் பெயர் கயவாகு” என்றே வந்துளது. பாடபேதம் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. தஞ்சையிலிருந்து பத்தினித் தெய்வத்தின் காலணிகளைக் கொண்டு வந்த இலங்கை வேந்தன் பெயரை, மகாவம்சம் கயவாகு’ என்றே, குறிப்பிட்டுளது. காட்டிய இச் சா ன் று க ள ல், கயவாகு’ என்பதே சரியான பாடமாம் என்பது ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்படு கிறது. ஆகவே, எங்கோ ஓரிடத்தில் கூறப்பட்டிருக்கும். பாடபேதத்தை, வலுவான ஒரு முடிவைத் தகர்த்தெறியும்

ஆயுதமாகக் கொள்வது வாத நெறியாகாது;