பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 தமிழர் வரலாறு

செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். இழும் எனும் ஒலி இடையறவுபடாது எழப், பறவைக்கூட்டம் மொய்த்துக் கிடக்கும், பருத்தனவும், சிறுத் தனவுமாகிய கொம்புகளைக் கொண்ட, பூவாமலே காய்க்கும் பல்வேறு மரங்களுள்ளும், பருத்த, இனிய பழங்களை உடைமையால், சிறந்ததாக மதிக்கப்படும் பலா மரம் போல, புலால் நாறும் கடலால் சூழப்பட்டு, வானத்தால் மூடப்பட்ட, பரந்து அகன்ற பேருலகில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பல்வேறு சமயத் தவரும் வந்து, வழிபாடு ஆற்றுவதற்கு ஏற்பப், பல்வேறு கடவுள்களுக்கான விழாக்கள் எடுக்கப்படுவதால், பழம்பெரும் சிறப்புற்றது, அக்கச்சிப் பெரு நகர். அழகிய வளர்பிறைத் திங்கள், காட்சி அளிக்கும், அந்திப்போதின் செவ்வானத்தில், கார் முகில் கூட்டம் அசைவதே போல, செங்குருதி ஆற்றில், வெண்ணிறத் தந்தங்களைக் கொண்ட கரிய களிறுகளின் பிணங்கள் ஈர்த்துச் செல்லப்படுமாறும், துரியோதனனும், அவன் உடன் பிறந்தாருமாகிய நூற்றுவரும் அழிந்து போகுமாறும் கொடிய போர் செய்து வெற்றி கொண்ட, நெடிய பெரிய தேர்ப்படையினையுடைய, ஓயாது போர் மேற்கொண்டிருக்கும் பாண்டவர் ஐவர் போல, ஒர் எண்ணுக்குள் அடங்கமாட்டாப் பெரும்படை தம்மிடத்தே உளது என்ற செருக்கால், தன் மீது போர் தொடுத்து வந்த, தன்னோடு ஒத்துப்போகாத பகைவர், தோல்வியுற்றதும், வெற்றிக்களிப்பால், ஆரவாரிப்பவனும், பொருள் வேண்டி வந்து, புகழ்பாடி நிற்பார்க்கு வாரி வாரி வழங்குவோனுமாகிய தொண்டைமான் இளந்திரையன், அக்கச்சிப் பெருநகரில் உள்ளான்.

காழோர் இகழ்பதம் நோக்கிக், கீழ நெடுங்கை யானை, நெய்ம்மிதி கவளம், கடுஞ்சூல் மந்தி கவரும் காவின், களிறுக தன் அடக்கிய வெளிறுஇல் கந்தின் திண்தேர் குழித்த குண்டுநெடுந் தெருவின், படைதொலைவு அறியா, மைந்துமலி பெரும்புகழ்ப்