பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வரலாறு-II


அதிகாரம்: XX

கரிகாலன்

வெண்ணிப் போர் :

பழந்தமிழ்ப் பாக்களில், பெயர் சுட்டிக் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் தமிழ்ப் பேரரசின், கரிகாலன், சமகாலப் புலவர்களால் பாடப்பெற்று, அது காரணத்தால், அவன் வாழ்க்கையைத் திரும்பவும் அமைக்கப் பெருந்துணை புரியும், மூன்று குறும் பாடல்களாலும், இரு நெடும்பாடல்களாலும், அவன் பாராட்டப் பெற்றுள்ளான். அவற்றுள் ஒன்று, பெண்பாற் புலவர் வெண்ணிக் குயத்தியாரால் பாடப் பெற்றது. வெண்ணி எனவும் அழைக்கப்பெறும் அவ்வெண்ணி, தஞ்சை மாவட்டத்தில், தென்னிந்தியப் புகைவண்டித் தொடர் நிலையமாம். இன்றைய கோயில் வெண்ணி ஆகும். பண்டை நாட்களில், பாடற்கலை என்பது, உள்ளுணர்வின் இயல்பான எழுச்சி; கற்றுப்பெற்ற புலமையின் விளைவு அன்று; கவிதைக்கான அகத்துாண்டுதலின் பயன்; பண்டிதர்களின் திட்டமிட்ட படைப்பு அன்று; பழைய தொகை நூல்களால், சான்று காட்டல் போல், அனைத்து இனம், அனைத்து நிலைகளையும் சேர்ந்த ஆடவர், மகளிர் ஆகிய இருவரும் பாக்கள் புனைந்தனர். வெண்ணியைச் சேர்ந்த குயவர் மகள், வெண்ணிக்குயத்தியார் வெண்ணிப்பறந்தலைப் போரில், பகைவன் ஒருவன்பால், கரிகாலன் கொண்ட வெற்றிக் கொற்றத்தையும், தோற்று அவமானப்பட்ட அப்பகைவனின் தற்கொலைக் கொடுமையையும் பாடியுள்ளார். இவ்வாறு செல்கிறது, அப்பாட்டு:- “நீரால்