பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்திரையன் 103

முடிகளைக் கைக்கொள்வதல்லது. அவரோடு சமாதானம் செய்துகொள்ள விரும்பான்’ என்பது போலும் பொருள் தெளிவில்லாச் சொற்றொடர்கள். பிரெஞ்சு நாட்டில், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் இழந்து நெடுங்காலம் கழிந்த பின்னரும், பிராத்தானிய நாட்டுப் பேரரசர்கள், விடாமல் மேற்கொண்டிருந்த பிரெஞ்சு நாட்டு அரசுரிமைப் பட்டயங்கள் போலவே, பொருள் தெளிவு அற்றனவாம்.

             “கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்
              வென்றியல்லது வினை உடம்படினும்
              ஒன்றல் செல்லா" 
                                             -பெரும்பாண் : 450-453.

ஆகவே, இளந்திரையன், காஞ்சிநாட்டை ஆண்டுகொண்டிருந்த காலம், எவ்வித வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்ததான அமையவில்லை. ஆனால், கரிகாலன் புகழைப் பாடிய புலவராலேயே, இளந்திரையனும் புகழப் பட்டுள்ளான். ஆகவே, கரிகாலனோடு, இளந்திரையனுக்கு உள்ள உறவு, ஆய்வுக்குரிய முக்கியப் பொருளாகிறது. இளந்திரையன் காஞ்சி அரியணையைக், கரிகாலன் பிள்ளைப் பருவத்தில் கைப்பற்றிக் கொண்டதாக,

திரு கனகசபை அவர்கள், கருதுகிறார். ஆனால், அதற்கான அடிப்படை அகச்சான்று சிறிது கூட இல்லையாகவே, அது, ஆய்வுக்குத் தகுதியற்றது: அது, ஒரு தவறான கற்பனையல்லது, வேறு அன்று. இளந்திரையன் கரிகாலன் காலத்தவனாதலின், கரிகாலன், காஞ்சி நாட்டை வென்று கைக்கொண்டதும், இளந்திரையன் காஞ்சிக் காவலனாக நியமிக்கப்பட்டு, கரிகாலனுக்குப் பின்னரும், அதே நிலையில் தொடர்ந்து இருந்தவனாக வேண்டும்:

தெலுங்கு நாட்டுச் சோடச் கல்வெட்டுக்கள். கரிகாலனுக்குத், தொண்டைமான் என்ற பெயரன் ஒருவன்