பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 தமிழர் வரலாறு

                           ‘இருநிலம் கடந்த, திருமறு மார் பின்,
                           முன்னீர் வண்ணன் பிறங்கடை , அந்நீர்த்
                           திரை தரு மரபின் உரவோன் உம்பல் 1.
                           மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும், 
                           முரசு முழங்குதானை மூவருள்ளும் 
                           இலங்கு நீர்ப் பரப்பி ன் வளை மீக் கூறும்
                           வலம் புரியன்ன வ ைசநீங்கு சிறப்பின் 
                           அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் 
                           பல்வேல் திரையன்'’,
                                               - பெரும் பாண் : 29 - 37

பத்துப்பாட்டின் உரையாசிரியர் நச்சினார்க்கினியர், மேலே காட்டிய பாடற்பகுதியில் வரும் “திரைதரு” என்ற தொடருக்குத் தெரிந்த ஒரு கட்டுக் கதைமூலம், அதற்கு விளக்கம் காண முற்பட்டுள்ளார். அவர் கூறியது : “நாகப் பட்டினத்துச் சோழன், பிலத்துவாரத்தால், நாகலோகத்தே சென்று, நாக கன்னியைப் புணர்ந்த காலத்து, அவள், யான் பெற்ற புதல்வனை என் செய்வேன் என்றபொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலேவிட, அவன் வந்து கரையேறின், அவற்கு, யான் அரச உரிமை எய்துவித்து நாடாட்சி கொடுப்பன், என்று அவன்கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரைதருதலின், திரையன் என்று பெயர் பெற்ற கதை கூறினார்,’ என்பது, முன்பே காட்டியவாறு, திரையர் என்பார், ஒரு பழங்குடியினராதலன், இவ்விளக்கம் பொருந்தாது. (பவத்திரி என்ற நகருக்கு உரியவனும், பொன்னணிகள் பூண்டவனுமாகிய மற்றொரு திரையர் தலைவனும் உள்ளான். செல்லா நல்விசைப் பொலம் பூண் திரையன், பல்பூங்கானல் பவத்திரி'அகம்: 340 : 6-7) ஆயினும், இன்றைய எழுத்தாளர் சிலர், இக்கட்டுக் கதையை, வரலாற்று உண்மையாக ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் இளந்திரையனைப் பிறிதொரு காதல் கட்டுக்கதைக் குழந்தையாக, இந்த இடத்தில்,