பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்திரையன் 107

நாகப்பட்டினத்துச் சோழன் மகன் அல்லாமல், வேறு ஒரு காவிரிப்பூம் பட்டினத்துச் சோழன் மகனாக, திரைவழி மிதந்து வாராமல், கலம் ஏற்றி அனுப்பப்பட்டு, அக்கலம், கடும் சூறாவளியால் தாக்குண்டு மூழ்கிப் போக, அதன் பின்னர், அவன் குறித்து யாதும் - அறிய வாராமகனாகக் கொண்டு, அக்கட்டுக் கதையை மேலும் பொருளற்றதாகச் செய்தும் உள்ளனர். இக்கதை மணிமேகலையில் இடம் பெற்றுளது. காவிரிப்பூம் பட்டினத்துச் சோழன், நாகப் பட்டினத்துச் சோழன் போலல்லாமல், தன் மகனைப் பார்த்தும் அறியான் ஆதலின், அவன் தன் மகனுக்கு நேர்ந்து விட்ட கதியைக் காண் பதில் ஈடுபாடு கொண்டுவிட்டது, அக்காலை, வழக்கம்போல் கொண்டாட வேண்டிய இந்திர விழாவைப் புறக்கணிக்க நேர்ந்து, அக்கதையில் விளக்கியுள்ள வாறு, அப்பழைய துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொள்வதில் கொண்டுபோய் விடுவதும் செய்த க. இருகதை களுமே நம்புதற்கு இயலாதன ; அவை இரண்டையும் ஒன்றாக இணைத்துக் காண்பது, அவற்றின் மீது நம்பிக்கையை உண்டாக்கிவிடாது.

    புறநானூற்றுப் பதிப்பாசிரியர் அல்லது தொகுப்பாசிரியர், 185 ஆம் எண் பாட்டு, தொண்டைமான் இளந்திரையன் பாடியது என்றும், 95 ஆம் எண் பாட்டு, தொண்டைமான் படைக்கலப் பெருமை குறித்துப் பாடுகிறது என்றும் கூறியுள்ளார். தொண்டை மான்’ என்ற சொல், தொண்டை” என்ற சொல்லும் சமஸ்கிருத விகுதி மான் (மத்) என்பதும் இணைத் து, தொண்டைக்கு உரிய தலைவன் எனும் பொருள் உணர்த்தும் ஒரு தொகைச் சொல், தொண்டையர்’ எனும் சொல், தொண்டைக் கொடியை அடையாளச் சின்னமாகக் கொண்ட பழங்குடியினர் எனும் பொருள் உடையது; தொண்டை என்பது, இன்றைய நாட்களில், பொதுவாகக், கோவை என அழைக்கப்படுகிறது. ஆனால், தெலுங்கில், ‘தொண்டே’ என்பது, அச்செடியின், பொதுவான பெயராகும். பிற்காலப் பல்லவர்கள், அதாவது, காஞ்சியைக்

கி. பி. 550க்கு முன்னரே மீண்டும் கைக்கொண்டு, அந்நாள்