பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்திரையன்

111

பாலைக் காட்டைக் கடந்து சென்ற காதலன்ம, தான் திரும்பிவரும் காலமாகத் தெளிவாகக் கூறிய பருவம் இதுவல்லவோ எனக் கேட்கின்றன; இஃது, அப்பருவம் அன்று பருவகாலம் அன்று என்பதை மறந்து கடல் நீரைக் குடித்துக் கருவுற்றுவிட்ட கார்மேகம், அது தாங்கமாட்டாது பெய்து ஒழிய மழை பெய்து விடவே. அதைப் பருவ மழை யென்றே கருதிவிட்ட அறியாமையால், பிடவும், கொன்றையும், காந்தளும் மலர்ந்துவிட்டன. ஆகவே, அது கொண்டு. நீயும், இது கார்காலந்தானோ என எண்ணிக் கலங்கி விடாதே இது கார்காலம் அன்று”.

”நீர் அற வறந்த நிரம் யா நீளிடைத்,
துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்,
தாம் வரத்தெளித்த பருவம் காண்வர,
இதுவோ என்றிசின்; மடந்தை மதியின்று
மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வில
பிடவும், கொன்றையும், கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே'’,

-நற்றினை:99

“பாக காதலியைப் பிரிந்து வந்து, இப்போது வருந்துகின்ற நான், பரந்த கடலின், கரையை மோதும் பெரிய அலைகள் கொண்டு வந்து குவித்த மணல்மேட்டில், கடல் அலைகளோடு வந்து மொய்க்கும் நண்டுகளைப் பிடிக்க, தன்னிடமிருந்து வெளிப்படும் தான் செல்லுமிடமெல்லாம். வீசா நிற்க, அந்நண்டுகள் ஓடுமிடமெல்லாம் தொடர்ந்து ஓடி ஓடி விளையாடிக் களைப்புற்றுப் போக, விளையாட்டில் விருப்பம் ஒழிந்து இருந்த இளையளாம் அவள் பால் சென்று, வினைமேற் செல்லத் துடிக்கும் என் உள்ளத்துக் கவற்கியைக்