பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

123


விருப்பம் இன்றி, வெறுப்போடு கொடுக்கும் தண்ணீரை இரந்துபெறு நீரைக் குடியேம் என்னும் மனவலி இல்லாமல், தம் வயிற்றுப் பசித்தீயைத் தணிப்பான் வேண்டித், தாமே இரந்து கேட்டு உண்ணு வாரை, இவ்வுலகில் பெறுவரோ ?"

"குழவி இறப்பினும், ஊன்தடி, பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளில் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய,
கேளல் கேளிர், வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத்,
தாம் இரத்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ்வுலகத்தானே ?"
- புறம் : 74

புறநானுாற்றுத் தொகுப்பாசிரியர், "சேரமான் கணைக்கால், இரும்பொறை சோழன் செங்கணானோடு, திரும்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிதையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான், சொல்லித் துஞ்சிய பாட்டு" இது என்க் கூறியுள்ளார். இது, அடங்கக் கூடாததொன்றன்று ! இப்பழங்கதையில் நம்புவதற்கு இயலாத எதுவும் இல்லை ; ஆனால், இதில் தொடர்புபடுத்தப்பட்ட அரசர்கள் யாவர் என்பது பற்றி, மூலம் எவ்விதக் குறிப்பையும் தரவில்லை ; தொகுப்பாசிரியர் , அப்பழங்கதையைக் கேட்டறிந்து, அதை அச்செய்யுளோடு இணைத்து விட்டார் என்ற கருத்தை மறுக்க எதுவும் இல்லை. இப்பழங்கதை குறித்து ஐயப்பாடுகளும் உள்ளன. "தமிழ் நாவலர் வரலாறு" என்ற, உண்மையில் அது அல்லாத, அரிய பெயரால் அழைக்கப்படும். கி. பி. 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர்த் தொகுக்கப்பெற்ற, சிலவற்றிற்குச் சுருக்கமான உரை விளக்கத்தோடு கூடிய தமிழ்ப் பாக்களின் தொகைநூல் ஒன்று உளது. அத்தொகை நூலில் இப்பாட்டு, 158ஆம் எண் பாட்டாக வருகிறது. அதற்குக்