பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

131


நாட்டில் உள்நாட்டுப் போர் குறித்துப் பேசும் பிற பாக்களால் உறுதிசெய்யப்படுகிறது. நெடுங்கிள்ளி என்பான் ஒருவன், இவனால், உறையூரில் முற்றுகை இடப்பட்டுள்ளான்: [புறம் : 45 முன்பே எடுத்தாளப்பட்டுளது]. நலங்கிள்ளியின் தலைநகர் காவிரிப்பூம்பட்டினம் :

அடிக்குறிப்பு :

"கூம்பொடு
மீப்பாய்களையாது மிசைப்பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெரும்கலம், தகாஅர்
இடைப்புலப் பெருவழி சொரியும்

கடல் பஃல் தாரத்த நாடுகிழவோயே". -புறம் : 30 :10-14]

கொளுவின் கூற்றுப்படி, இது நலங்கிள்ளி புகழ்பாடப் பாடப்பட்டுளது. கொளுவில் கூறப்படும் செய்திகள் மறுக்கப்படா நிலையில், அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளேன். நெடுங்கிள்ளி, உறையூர் அரியணையைக் கைப்பற்றிச் சோழ நாட்டின் உள்நாட்டுப் பகுதிகளைத் தன் ஆட்சிக் கீழ்க் கொண்டுவிட்டான். அதை மீட்டுக் கொள்ள நலங்கிள்ளி அவனோடு போரிட்டான்.

பிற அரசர்களைப் புகழ்ந்து பாடும் பாக்களிலும், நலங்கிள்ளியைப் புகழும் பாடல்கள், எண்ணிக்கையில் அதிகமாம்.

நலங்கிள்ளி வாழ்ந்திருந்த துன்பச் சூழல், இரவலர் உள்ளத்தில், பெருங்கவலையை வளர்ப்பதாய் இருந்தது. அத்தகைய புலவர்களில் ஒருவர் பாடிய பாட்டு ஒன்றில், பழம்பாடல்களில் காணக் கூடாத நிலையினைத் தெளிவுறக் கொண்டதான, நிலையாமைக்குறிப்பு, தமிழ்ப்பாட்டில் முதன்முதலாக, இடம் பெற்றுளது. உறையூர் முதுகண்ணனார், அவனுக்காக, இவ்வாறு பாடியுள்ளார். "சேற்றில் வளரும் தாமரைக் கொடியில் மலர்ந்த, சிறந்த நிறம் காட்டும் நூறு இதழ்களைக் கொண்ட மலர்க்காட்டைக்