பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

137


உறையூரையும், "அறந்துஞ்சு உறந்தை" (வரி ; 9) தமிழுக்கு உரிய மதுரையையும், "தமிழ்கெழு கூடல்" (வரி : 1.3) குறிப்பிடுகிறது.

கடைசியாக எடுத்துக் காட்டிய செய்யுற்கண், சோழர் முன்னோர் குறித்த இருபழங்கதைகள், முதன்முதலாக இடம் பெற்றிருப்பது காணப்படுகிறது. அவற்றுள் ஒரு பழங்கதை, அசுரர், சிலர் வானத்தில் தொங்கிக்கொண்டிருந்த கோட்டையில் வாழ்ந்திருந்தவாறே தேவர்களை அழித்து வந்தனர். பழைய சோழ அரசன் ஒருவன், அக்கோட்டையை அழித்து அதன் மூலம், ஏழைத் தேவர்களின் துயர் துடைத்தான் என்பது. சோழர்களைப் பற்றிய இக்கதை மட்டும் அல்லாமல், பாண்டியர்களைப் பற்றிய இதுபோலும் கதைகளும், அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழர் உள்ளத்தை ஆரியமயமாக்கத் துணைபுரிந்தன. மற்றொரு பழங்கதை, சோழர் குல முன்னோர்களில் ஒருவன் சிபி என்பவனாம். புறா ஒன்று, தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டதனால், தன் தொடையிலிருந்து, ஒரு துண்டு தசையை வெட்டி எடுத்துப் புறாவைத் துரத்தி வந்த பருந்துக்குக் கொடுத்த சிவியின் கதை நன்கு தெரிந்த ஒன்- சிவி வழி மரபினைச், சோழ அரசர்க்கு உரித்தாக்குத புறம் : 37ல், நப்பசலையாராலும், புறம் ; 46ல் கிழாராலும், இடம் பெற்றுளது.

"புள்ஸ்ரீ புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!"

(பறவை ஒன்றின் துயர் தீர்த்த, வெள்ளிய வேல் ஏந்தி சினம் மிக்க பெரும்படைக்கு உரிய, சோழன் வழி வந்தவனே - புறம் : 37 : 5-6

"நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை"
புறாவின் துயர் தீர்த்தோன் வழியில் வந்தவனே

{{Nop}}