பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

143


சிறப்பு அடை அடுத்த சாதிப் பெயராகவுமே இருக்கும்; அரசர்கள் பெயர்களிலும் இதுவே நிலையாம். இன்றும், சிற்றுார்களில், மக்கள் இயற்பெயர் உடையராயினும், பழங்கால வழக்கமாம், சிறப்பும் பெயரிட்டு அழைக்கப் பெறுதல் பெருவழக்காம். ஆகவே, இவ்விரு சோழர்களும், ஒருவர் பின் ஒருவராகவோ, அல்லது, ஒரே காலத்தில் வேறு வேறு பகுதிகளில் ஆட்சிபுரிந்த நெருங்கிய உறவினராவர் ; பெரும்பாலும், உடன் பிறந்தவராவர். ஆனால், அவர்கள் உறவு முறைகுறித்த எவ்விதக் குறிப்பும், பாக்களில் இடம் பெறவில்லை.

சிலப்பதிகாரம், சேரவேந்தன் செங்குட்டுவனின் மைத்துனனாகிய வளவன் கிள்ளி என்பான் ஒருவனைக் குறிப்பிட்டு, அவ்வளவன் கிள்ளியின் பகைவர்களாகிய சோழ இளவரசர்கள் ஒன்பதின் மரைச், செங்குட்டுவன் ஒரே நாளில் வெற்றி கொண்டான் எனக் கூறுகிறது.

"ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை

நேரிவாயில் நிலச் செரு வென்று".
-சிலம்பு : 28 : 116

(நேரிவாயில் போர்க்களத்தில், ஆத்திப்பூ மாலை அணி ஒன்பது சோழ இளவரசர்களை வென்று).

"மைத்துனவளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்,
இளவரசுபொறாஅர், ஏவல் கேளார்
வள நாடழிக்கும் பண்பினராதலின்

ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்".
-சிலம்பு : 28 : 118 - 1

"தன மைத்துனன் வளவன் கிள்ளியொடு ஒத்துவர, அவன் பெற்ற இளவரசு உரிமையை ஏற்றுக் கொள்ளமறு, அது காரணமாக, நாட்டுவளம் அழித்த ஒன்பது சிற்ற