பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

145

மரபு வழிச்செய்திக்கு மதிப்பளிப்பவராய் இருந்தும், உரைபெரு கட்டுரையும், அதற்கான அடியார்க்கு நல்லார் உரையும், தெளிவாக உணர்த்தும் செய்திகளைக் காட்டிலும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சம காலத்தவை என்ற தன் கொள்கைக்கே, முதலிடம் தருகிறார்.

மணிமேகலை அழகுக்கு அடிமைப்பட்டு, அதனாலேயே உயிரிழந்துபோன சோழ இளவரசன் உதயகுமாரனின் தந்தை யாவன், இக்கிள்ளிவளவன் எனக் கூறுவதன் மூலம், மிகப்பெரிய தவறு செய்கிறார், திரு. கனகசபை அவர்கள். (1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் : பக்கம் : 77) மணிமேகலை, முழுக்க முழுக்க, ஒரு கட்டற்றக் கற்பனைக் கதை. வரலாற்று மூலமாமக் கொள்வதற்கு அறவே தகுதி அற்றது. அதில், நாகபுரத்தைச் சேர்ந்த புண்ணியராசன் எ ன் பா ன்; கிள்ளிவளவன் நட்பைப் பெறுவான் வேண்டி, ஒருமுறை கலம் ஏறிக் காவிரிப்பூம்பட்டினம் சென்றிருந்தபோது, ஆங்கு, மணிமேகலைக்கு ஒப்பார், நாவலந்தீவாம் இப்பேருலகில் ஒருவரும் இலர் எனக் கூறக்கேட்டதாகவும் கூறுகிறான்.

"நாவலந் தீவில் இந்நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை ; இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக்
கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக்

காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்".
-மணிமேகலை: 25 : 12 - 16

இந்தப் பகுதியிலிருந்தே, திரு. கனகசபைப் பிள்ளை அவர்கள், நாம் ஆய்ந்து கொண்டிருக்கும் கிள்ளிவளவன், மணிமேகலை காலத்துப் புகார்க் காவலன் ஆவன் எனக் கொண்டுள்ளார். கிள்ளி, வளவன், என்ற சோழ இளவரசர் எனும் பொருள் உடைய மேலும், புறநானூறு பாராட்டும் கிள்ளிவளவன் உரையூர் அரசனே அல்லது புகார் அரசன் அல்லன் ஆதலின்;

த.வ. II-10