பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழர் வரலாறு


அவ்விளக்கம் பெறக் கல்லாடனார், துணையினை நாட வேண்டியுளது. அவன் புகழ்பாடும் கல்லாடனார் பாக்கள் இவை.

"செழியன்
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங்கானம்" - அகம் : 209

"ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப"

"ஒன்று மொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணி,
பிணியுறு முரசம் கொண்டகாலை
நிலைதிரிபு எறியத் திண்படை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றே நின் வேல் செழிய"

"அரைசுபட அமர் உழக்கி
உரை செல முரசவெளவி
முடித்தலை அடுப்பாகப்
புனல் குருதி உலைக் கொளீஇத்
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய"
- புறம் : 23, 25, 26.

இவற்றுள், எடுத்துக்காட்டு ஒன்றில், செழியன் என்ற அவன் பெயரும், அவன் பகைவர் எழுவர் என்பதும், போர்க்களம் ஆலங்கானம் என்பதும் உணர்த்தப்பட்டன. எடுத்துக்காட்டு இரண்டில், களம், ஆலங்கானம் என்பது மட்டுமே உணர்த்தப்பட்டது. எடுத்துக்காட்டு மூன்றில், பகைவர், வேந்தர் என்பதும், அவன், செழியன் என்பதும் உணர்த்தப்பட்டன். எடுத்துக்காட்டு நான்கில், பகைவர்