பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

155


முரசு கைப்பற்றப்பட்டதும் அவன் களவேள்வி செய்ததும்: அவன் செழியன் என்பதும் உணர்த்தப்பட்டன.

ஆக, அப்பாக்கள் நான்கினையும் ஒருங்கு வைத்து நோக்கிய வழியே, ஆலங்கானத்துப் போர் வீரன் செழியன், அவன் பகைவர், வேந்தர் உள்ளிட்ட எழுவர், களம், ஆலங்கானம், அவன், பகையரசர் முரசு கொண்டு, களவேள்வி செய்தான் என்ற செய்திகளை அறிய முடிந்தது. அவன் இளையோன் ; பகைவருள் வேந்தர் இருவர் ஒழிந்த ஐவர் யார் : அவன் களம் நோக்கிச் சென்ற கோலம் ஆகியவற்றை இவைதாமும் அறிவிக்கவில்லை பகைவர் எழுவருள், வேந்தர் இருவர் ஒழிந்த ஐவர், வேளிர் என்பதை உணர, மாங்குடி மருதனாரையும். (மதுரைக்காஞ்சி : 55 - 56) அந்த ஐவர் இன்னின்னார் என்பதை உணர,

"செழியன்,
ஆலங்கானத்து அகன் தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினங் கெழுதிதியன்,
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நாரரி நறவின் எருமை ஊரன் ;
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோவேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்
முரசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக்

கொன்று களம் வேட்ட ஞான்று"
- அகம் 38

என்ற நக்கீரனாரின் இப்பாடலை நாடவேண்டியுளது.

போரில் புண் பெற்ற படைகளின் நிலைகண்டு. அதன் நலம்பேணும் கடமையுணர்வால், வாடைப்பருவம் வந்துறவும் கணவன் வாரானாக வருந்தும் கோப்பெருந்தேவியையும் மறந்து, போர்க்களத்துப் பாசறை வாழ்க்கையை மேம் கொண்டிருக்கும் செழியனின் பேராண்மை நலம் பாராட்டுப்