பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழர் வரலாறு

at the time the anthology was made, and supplied the Colophons ; Futher, why the Colophons might not have; been added to individual poems earlier than their entry in to an anthology are matters which are apparently not deemed worthy of consideration by Mr. Srinivasa Aiyangar. Page : 9

கொளுக்கள் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கத்தக்கன அல்ல என்ற தம் முடிவிற்கு அரண் செய்ய "எல்லாம் பாக்களுக்கும் கொளுக்கள் கொடுக்கப்படவில்லை. புறம் 266-ஆம் எண் பாட்டோடு அது நின்றுவிடுகிறது" என்ற திரு. பி. டி. எஸ். அவர்களின் வாதத்திற்கு, "உண்மையில் எல்லாப் பாக்களுக்குமே கொளுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. சிலவற்றிற்குக் கிடைக்காமைக்குப், பழைய ஏட்டுச் சுவடிவளிகன் சீர்கெட்ட நிலையே காரணம். இது, அந்நூல் பதிப்பாசியரால், அவருடைய முகவுரையில் (14 - 18), தெளிவாக உணர்த்தப்பட்டுளது" என வி ள க் க ம். அளித்திருப்பதின் மூலம், அவர் வாதத்தின் வலிவின்மையை உணர்த்தியுள்ளார்.

"In reality, the colophons were furnished for all the odes and as already stated, it is only the decayed state of the manuscripts, that is responsible for the gaps in our knowledge. This is sufficiently indicated by the learned: editor of the work in his preface" Page: 12

பல நூறு ஆண்டு கால இடைவெளியில் தொகை நூல்களில், பிழைபடு இடைச்செருகல்களே இடம் பெறாது. தம் பண்டைய வடிவிலேயே பாக்கள், கிடைத்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அரிதினும் அரிதாம். ஆகவே, அத்தகு குறைபாடு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு, அப்பாக்களையும், அப்பாக்களோடு கொடுக்கப்பட்டிருக்கும். கொளுக்களையும் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்க இயலாது.