பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழர் வரலாறு


அந்நிகழ்ச்சிகள் நிகழ்ந்ததற்கு, அதிகம் இல்லை என்றாலும், ஐந்து நூற்றாண்டு காலம் கழித்து, பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளைச் சிறிதும் தயங்காமல் ஏற்றுக் கொள்கிறார்...

"ஏதேனும் ஒரு செய்தி, பனைஓலை ஏடுகளிலோ, அல்லது அதனினும் எளிதாகப் பாழ்பட்டுப் போகும் ஒரு பொருள் மீதோ எழுதப்படாமல், கல்லின் மீதும், செப்புத் தகட்டின் மீதும் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதனாலேயே, அது முழு நம்பிக்கைக்கு உரியதாம் தகுதியைப் பெற்றுவிடுமா என்ற வினாவையும், அத்தகு கல்வெட்டுச் செப்பேடுகளில், மிகப்பெரிய பொய்யான இடைச்செருகல்கள் இடம் பெற்று விடவும், இலக்கிய ஆவணங்களைப் பெயர்த்து எழுதும் படிவங்களில் உண்மையான மரபு வழிச் செய்திகள், அப்படியே இடம் பெற்று விடவும் இயலாதா என்ற வினாவையும் எவர் ஒருவரும் எழுப்புக் கூடும்...

"கல்வெட்டுத் திறனாய்வாளர்களின், இலக்கியச் சான்றுகளை அணுகும் நிலையில் மேற்கொள்ளும் தேவையில்லா விழிப்புணர்வும், கல்வெட்டுச் செப்பேடுகளில் இடம் பெற்றிருக்கும் மிகப்பெரிய பொய்ச் சான்றுகள்பால் காட்டும் கிறுபிள்ளைத்தனமான நம்பிக்கையும், அவர்களின் போக்கு குறித்த முறையான ஐயப்பாட்டினை எழுப்புகிறது:

Mr. Vengayya remarks: "the Tamil anthology *Purananuru, for instance, furnishes the names of a number. of chola kings...But the evidence furnished by these Adocuments and the tredition connecting then with particular ...chola kings have to be received with caution" (Archaea’s :1ogical survey of India; 1905-6 P-174 N, 7)

But then, having imposed this reserve on himself in

the evidence of literary tradition, Mr. Venkayya.