பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழர் வரலாறு

பிறரால் எடுத்துக்கொள்ளப்பட்டது ; இதுவே எம் முறை" என்றனர். அரசன், சிறிதே முறுவ வித்து, "நல்லது, தங்களுடைய பழைய உரிமையை மக்கள் மன்றத்து நிலைநாட்டி, மீட்டுக் கொள்வீராக" எனப் பணிக்க, முறையீட்டாளனும், அது செய்ய, வில்லேத்திய தடந்தோளனாகிய வேந்தன், "எம் குல முன்னோரால், முறைப்படி வழங்கப்பட்டது என்றாலும் தரப்பட்டதாக் கொள்க" எனச் செம்மாந்து கூறி, நெடிய தேரும், கடல்போலும் பெரிய தானையும் கொண்ட அக்காவலன். முனறயீட்டாளனாகிய, கொற்கைக்கிழான் காமக்காணி நற்சிங்கர்க்கு நீர் வார்த்துக் கொடுத்தான்.

"மற்றவன் தன் ராஜ்யவத்விரம் மூன்றாவது செலாநிற்ப,
ஆங்கொரு நாள்
கூடமா மதில் கூடற்பாடு நின்றவர் ஆமோதிக்கக்,
கொற்றவனே, மற்றவரைத் தெற்றென் நன்கு கூவி,
"என்னேய் நுங்குறை" என்று முன்னாக பணித்தருள,
மேனாள் நின்குரவரால் பான்முறையின் வழுவாமை
மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர்

கூற்றப்படுத்துவது,

ஆள்வதானை அடல்வேந்தே! வேள்விக்குடி எனும்

பெயருடையது

ஒல்காத வேல்தானை ஆடாதவேலி உடன் காத்த,
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி எனும் பரமேசுரனால்
வேள்விகுடி எனப்பட்டது கேள்வியில் தரப்பட்டதனைத்
துளக்கமிலாக் கடல்தானையாய கலிப்பரரால்

இறக்கப்பட்டது"

என்று நின்றவன் விஜ்ஞாப்யம் செய்ய
"நன்று நன்று" என்று முறுவலித்து
"நாட்டான் நின் பழமையாதல்
காட்டி நீ ("கொள்க" வென்)ன