பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தமிழர் வரலாறு


முரசுகொண்டு களம் வேட்ட

அடுதிறல் உயர் புகழ் வேந்தே !"
-மதுரைக் காஞ்சி : 1.25 - 180

வெற்றிகண்டு எடுத்த களவேள்வி, மாங்குடிகிழாரால் புறம் 26ல் விரிவாக விளக்கப்பட்டுளது :- மிக்க ஆழம் வாய்ந்த, பரந்த கடலில், காற்றால் உந்தப்படும் மரக்கலம், அந்நீரைக் கிழித்துக்கொண்டு ஓடுவதுபோல, போர்க்களிறுகள், போர்க்களத்துள் புகுந்து பிளவுபடுத்தி இடம் உண்டாக்கிவிட, அவ்வகையால் இடம் அகன்ற களத்தில், வேலேந்திப் புகுந்து, இருபெரும் வேந்தர்களும் இறந்து போகக் கடும்போரிட்டு, அவ்வெற்றிப் புகழ் பரவ, அவர் போர் முரசுகளைக் கைக் கொண்டதோடு அமையாது, அப்பகையரசர்களின் முடித்தலைகளை அடுப்பாக அடுக்கிப், பகைவரின் செங்குருதியாம் உலையில், தசையையும், மூளையையும் இட்டு, வெட்டுண்டு வீழ்ந்து கிடக்கும் வீரவளை அணிந்த தோள்களைத் துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த உணவு கொண்டு, களவேள்வி செய்து முடித்த, கொல்லும் போர்வல்ல செழிய! ஆன்று அமைந்த கேள்வி நலத்தையும், ஐம்புலன் அடக்கிய கோட் பாட்டினையும், நான்கு வேதங்களை உணர்ந்த அறிவு மேம்பாட்டினையும் உடைய அந்தணர்கள், சுற்றமாக இருக்க, உன் ஆட்சிக்கு அடங்கிய வேந்தர்கள் எல்லாம், ஏற்ற ஏவல்களை இனிதே முடிக்க, நிலைபேறுடைய வேள்வியைச் செய்து முடித்த அதற்குத் துணையாக வாய்த்த வாள் வலியுடைய பெருவேந்தே ! பாண்டியன் பகைவர் எனும் பெயர் பெற்று, உன்னோடு போரிடமாட்டாது உயிரிழந்து, துறக்கம் புகுந்து வாழும் நின் பகைவர்கள், தவஞ் செய்வார் யாவரினும் நளி மிகச் சிறந்தோரே ஆவர்."

‘நளிகடல் இருங்குட்டத்து,
வளிபுடைத்த கலம் போலக்,
களிறு சென்று களன் அகற்றவும்,

களன் அகற்றிய வியல் ஆங்கண்,