பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டிய அரசர்கள்

181

"முதுவெள்ளிலை...தொழில் கேட்ப" -: ௸119 - 124; 'அரும்பில் அண்ண நாடிழிந்தனரும்"-:௸ 345.] அது, குறிப்பிடுகிறது.

நெடுஞ்செழியன் குறித்த பாடல்களில், மதுரை நாட்டை, ஆரிய மயமாக்கும் நிலை, விரைந்து முன்னேறுகிறது என்பது காணப்படும். மேலே எடுத்துக் காட்டிய ஒரு பாட்டில், நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களின் வழிகாட்டு நெறியின் கீழ், வேந்தன் வேள்வியாகம் செய்தான் என்பது கூறப்பட்டுளது. ஒருவன் பிறந்த நாண்மீன் குறிப்பிடப்பட்டு, "நீ, நீடு வாழ்க!" என வாழ்த்துதற்கு மாறாக, "நீ பிறந்த நாண்மீன் நிலைமேலுடையதாக நிற்குமாக!" எனும் வாழ்த்தும் நிலைபற்றிய ஒரு குறிப்பும் உளது. ["நின்று நிலைஇயர் நின் நாண்மீன்". -புறம் : 34 : 24.] இது, பெரும்பாலும், தென்னாட்டில் இடம் பெற்று விட்ட ஓர் ஆரிய முறையாகும். பொதுவாக, அமைப்பு முறையில், பட்டினப்பாலை போன்றதான மதுரைக்காஞ்சி, முன்னது, காவிரிப்பூம்பட்டினத்தை விளக்கிக் கூறுவது போலவே, மதுரை மாநகர் அமைப்பை விரித்து உரைத்து, அந்நகரில் உள்ள இறைத்தன்மை வாய்ந்த இடங்களையும் குறிப்பிடுகிறது.

மதுரையில் ஆகம வழிபாட்டு நெறிகள்

ஆகம வழிபாட்டு நெறிகள், மதுரை மாநகரில் விரைந்து பரவியதற்கான அகச்சான்றுகளை மதுரைக் காஞ்சியில் நாம் பெறுகிறோம். அப்பாட்டின் ஆசிரியர் இவ்வாறு விளக்கியுள்ளார் :- "நீர், நிலம், நெருப்பு, காற்று, நால்வேறு திசைகளைக் கொண்ட வான்வெளி ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் ஒருசேரப் படைத்த, மழுவாகிய வாட்படையுடைய பெரியோனாம் சிவனை முதல்வனாகக் கொண்டு, தெய்வத் தன்மையால், நிறைந்த ஒளியினையுடைய வாடாத மலர்களையும், இதழ்குவியாக் கண்களையும், அவியாகிய உணவினையும் உடைய, ஆக்கம் தரும் மாயோன், முருகன்