பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டிய அரசர்கள்

188


கடுமழைவரவால் மிகுவதோ செய்யாது, என்று ஒரு படித்தாகவே இருக்கும் கடல்போல, மக்கள் வாங்கி விடுவதால் குறைந்து போவதோ, புதுவரவால் மிகுந்து போவதோ இல்லாமல், வாணிகம், என்றும் ஒரே படித்தாக, இரவு பகல் எப்போதும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.

நகரில், காலம் விரைந்து கடந்து கொண்டே உளது, நாட்பொழுது, பையப் பையக் கழிய, காட்சியும் மாறுகிறது. மாலைப் பொழுது கழியும் அக்காலத்தில், அந்நகரத்துப் பெரு நிதிக்கிழவர்கள், காலாட்கள் சூழ்ந்துவரத் தேர் மீதும், குதிரைகள் மீதும், வீதிகளில் உலாவருவர். அந்திவானத்தைச் செந்நிறத்தை நினைவூட்டும், செந்நிறம் வாய்ந்து, ஒள்ளிய பூத்தொழில் செய்யப்பட்ட மேலாடை அணிந்திருப்பர். பொற்பிடி வாய்ந்த வாள், அவர் இடையில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் : இறவாப் புகழ் வாய்ந்த வெற்றி மாலைகள் அவர் மார்பில் கிடந்து புரளும். மிகப்பெரும் செல்வர் ஆதலின், நாளின் வெப்பம் மிகு நாழிகைப்போதினை, இவர்கள், தங்கள் இல்லத்தே, இன்பச் சூழ்நிலைகளில், இனிதே கழிப்பர். வானுலக மாதர்கள் வந்து குதித்து விட்டனரோ என எண்ணி வியக்கத்தகும் அவர்களின் மகளிர், வானளாவ வரிசை வரிசையாக உள்ள மாடங்களின் நிலா முற்றங்களிலே காட்சி அளிப்பர் : அவர்கள் மீதிருந்து எழும் நறுமணம், நகரின் நால்வேறு தெருக்களிலும் சென்று மணக்கும். அவர் தம் முகங்கள், மலைமுகட்டில் கூட்டப்பட்டுக் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் கொடிகளால் அவ்வப்போது மறைக்கப்படுவதால், முகிலால் மறைப்புறம் முழுமதி போல் காட்சி அளிக்கும்.

வலியரான் மெலிவுற்று முறை கேட்டு வருவார், நீதி கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சமோ, தோல்வி உற நேர்ந்து உள்ளத்தில் நடுக்கமோ கொள்ளாவாறு, ஒருவர் மீது வெறுப்போ, பிறிதொருவர் பால் விருப்போ கொண்டு விடாமல், துலாக் கோல்போல், நடுநிலை பிறழாது, நின்று தீர்ப்பு வழங்கும் அறங்கூர் அவை, அண்மையில்