பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டிய அரசர்கள்

189


அமைந்திருக்கும். நன்மை தீமைகளைக் கண்டறியவல்ல அறிவாற்றலால் சிறந்து, உள்ளத்தைத் தீதின்பால் செல்லவிடாது அடக்கி, தம்மை விட்டு அகன்றுவிடாவாறு. அன்பையும், அறனையும் தம்மகத்தே அடக்கிப், பழியொடுபட்டன தம்மை அண்டாவாறு அகற்றிப் பெரும்புகழ் வாய்ந்து, காவிதிப்பட்டம் வழங்கப்பெற்ற அமைச்சர் பெருமக்களின் பெருமனைகள் அடுத்து அமைந்திருக்குக் கொடுப்பது குறைபடாக், கொள்வது மிகைகொளா, வணிக அறம் பிழையாப் பெருஞ்செயலாலும், மாநிதி உடைமையாலும் புகழ் வாய்ந்த, மலைபடு பொருட்கள், நிலத்தரு பொருட்கள், கடல்படு பொருட்களாம் பல்வகைப் பண்டங்களில் வாணிகம் நடத்தும், நாடாளும் மன்னர் நிகர். வணிகப் பெருமக்களின் வாழிடங்கள், அடுத்து இடப்பெற்றிருக்கும். அரசியல் அங்கமாம், ஐம்பெருங்குழுவில், அமைச்சர் நீங்க உள்ள நால்வராம், புரோகிதர், படைத் தூதுவர், ஒற்றர் ஆகியோர் குடியிருப்புக்கள் அடுத்து வரும். இவ்விடங்களை அடுத்து சங்கறுத்து வளையல் முதலியன வணைவார், முத்து மணிகளுக்குத் துளையிடுவார், பொன்னணி புனையும் தட்டார், செப்புக்கலங்கள் செய்வார், ஆடைகள் நெய்வார். அழகிய உடைகள் தைப்பார், மணப்பொருளும், மலர்களும் விற்பார், எத்தகு நிகழ்ச்சியையும், இனிய உவமைகள் மூலம், வண்ணக்கலவையில் வரைந்து காட்டவல்ல ஓவியர் போலும் கைவினைஞர்கள் வாழும் குடியிருப்புக்கள் வரிசை வரிசையாக இடம் பெற்றிருக்கும். இவர்களும், இவர் போலும் பிறருமாகிய மாநகரத்து மக்கள், வாணிகம் கருதியும், வளமார் இன்ப நாட்டம் கொண்டு, வீதிகளில், இயங்குதற்கு இனி இடம் இல்லையாமாறு வந்து குவிந்து விடுவதால், தாம் ஒருவர் காலோடு, ஒருவர் கால் வந்து நிற்க வேண்டியதாகிறது. அம்மக்கள் கூட்டம் எழுப்பும், காது செவிடு படுத்தும் பேரொலிகள் ஒரு பால் இருக்க, நகரின் நால்வேறு தெருக்களிலும், பலாச்சுளை, மாங்கனி, மற்றும் பல்வேறு கனிவகைகள், காய்கள், கீரைகள், கற்கண்டு, உண்டற்கினிய வள்ளிக்கிழங்கு, உண்பார் அனைவரும்