பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டிய அரசர்கள்

190


புகழப்பண்ணப்பட்ட, இறைச்சி கலந்த இனிய சோறு ஆகியவற்றை, வருவார்க்கெல்லாம் விருந்தாகப் படைப்பது நிகழும் அந்தி அங்காடியின் ஆரவாரம், நாளங்காடி ஆரவாரத்திலும் மிக்க ஒலிக்கும். ஆங்குக்காணலாம் அத்துணைக் காட்சிகளும், காற்றால் கொண்டு வரப்பட்டு கரை சேர்ந்திருக்கும் கலங்கள், பண்டங்கள் இறக்கப்பட்டும், ஏற்றப்பட்டும், பாய்விரித்த, எழுந்து அடங்கும் கடல் நீரில் மீண்டும் புகுந்து ஓடும் கடற்கரைக் காட்சியைக் காட்ட வல்லவாம்.

ஞாயிறு வீழந்து விட்டது : திங்கள் எழுந்து விட்டது. என்றாலும், நகரம், இன்னமும் ஓய்வு காணவில்லை. மனைகளில் விளக்கேற்றல், மாநகரத்து அழகிய மகளிர், தங்களை, இன்ப நாட்டங்களுக்குத் தயார் செய்து கொள்ளும் அறிகுறியாய் அமைந்தது. அதுபோலவே, ஆடவர், மகளிர் என்ற இரு சாராரிலும், நாணித்தலைகுனியவைக்கும் பழிமிகு இழிகுணம் வாய்ந்தார், புறம் போந்து திரிவதற்கும், அவருள்ளும் ஒரு சிலர், பாகனையே கொன்று வீழ்த்துமளவு, களிறுகள் மதங்கொண்டு விடும்போது, அவை, மேலும் ஓடாவாறு, அவற்றின் கால்களைக் குத்திப் புண்ணாக்கித் தடுக்கும் வண்ணம், அவற்றைச் சுற்றிக் கொட்டப்பட்டிருக்கும் ஆணிகள், தம் கால்களை உறுத்தி ஊறுவிளைப்பதையும் உணர்ந்து கொள்ள இயலாவாறு, கள்ளை மிகக்குடித்து மயங்குவதற்கும், அதுவே ஏற்புடைக் காலமாம். ஆனால், பிறரால் பெரிதும் மதிக்கத் தக்க பெருமக்களும், அத்தெருக்களில் காணப்படுவர், அண்மையில் முதல் மகவு ஈன்ற இளமகளிர், ஈன்ற புனிறு தீர்ந்து புனிதம் பெறக் குளத்தில் சென்று நீராடப் போவர். முதற் கருவுற்ற இளமகளிர் இனிதே மிகப்பெற்று, அவரொப்ப வாழ்வு பெறுவான் வேண்டித் தேவராட்டியைப் பணிந்து வழிபடப் புறம் போவர், நடந்தனவும், நடக்க இருப்பனவும் அறிந்து உரைக்கும் வெறியாடு வேலன் குலத்து வந்தார். காதல் நோயுற்று வருந்திக் கிடக்கும் இளமகளிர் மனைகளில் வந்து குழுமி, அந்நோய், எந்தக் கடவுளால் வந்தது எனக் கண்டு கொள்வரோ, அக்கடவுள் புகழ்பாடும் பாக்களைக் காது