பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

195


"நகுதக்கனரே, நாடுமீக்கூறுநர்:
இளையன் இவன் என உளையக் கூறிப்,
படுமணி இ ட்டும் பாவடிப் பனைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படையமை மறவரும் உடையம் யாம் என்று,
உறுதுப் பஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை,
அகுஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎனாயின், பொருந்திய
என் நிழல் வாழ்நர், செல் நிழல் காணாது
கொடியன் எம் இறை எனக் கண்ணிர் பரப்பிக்,
குடிபழிதுாற்றும் கோலேனாகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி,
மாங்குடி மருதன் தலைவனாக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாதுவரைக என் நிலவரை!
புரப்போர் புன்கண்கூர

இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே!"
- புறம் 72;

தன் அரசவைப் புலவர் குழாத்தின், மாங்குடி மருதனாரின் தலைமை பற்றிய நெடுஞ்செழியனின் நற்சான்றிதழ், தலையாலங்கானத்துச் செ ரு வெ ன் ற பாண்டியன் புகழ் பாடுவதாகக் கூறப்படும், பத்துப்பாட்டில் ஒன்றாகிய, நெடுநல்வாடையின் ஆசிரியராகிய நக்கீரர், மதுரையில் நிலவிய தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராவர் என்பது ஒரு கட்டுக் கதையே என்பதை உணர்த்துவதாகும் என்பது. ஈண்டு, இடையில், குறிப்பிடல் ஆகும். நக்கீரர், சிவனைப் பற்றிப் பாடியுள்ளாராதவின், இக்கட்டுக்கதை சைவர்களால் கட்டிவிடப்பட்டதாகும். இ ன் றை ய எழுத்தாளர் சிலரால், இக்கதை, நெடுஞ்செழியன் தாளே