பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

11

செருக்கொடு நின்ற காலை, மற்றவன்
திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கித்,
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன்பயம் எய்திய அளவை மான,
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம்கவல்பு இன்றி மாழாந்து எழுந்து,
மாலை அன்னதோர் புன்மையும், காலைக்
கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவென மருண்ட என் நெஞ்சம் ஏமாப்ப,
வல்லஞர் பொத்திய மன மகிழ் சிறப்பக்,
கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட.”

-பொருநராற்றுப்படை : 64-100

இரவலர்க்கு, இவ்வாறு உண்ணவும் குடிக்கவும் கொடுத்த தோடு, அவர்களுக்கு, நெருங்க முடித்த முடிகளைக் கரையிலேயுடைய பட்டாடைகளைக் கொடுத்தான் ”கொட்டைக் கரைய பட்டுடை நல்கி” (பொருநர் : 155) தனக்கு என இத்ழ்களைப் பெறாத, பொன்னால் பண்ணப்பட்ட, தாமரை போலும் வடிவுடைய மலர்களைக் கொடுத்தான். (”ஏடுஇல் தாமரை” பொருநர் : 15.9) யானைத் தந்தத்தால் பண்ணப்பட்ட தாமரை மொட்டினைக் கொண்ட நெடிய தேரில், சாதிலிங்கம் ஊட்டப்பெற்ற தலையாட்டம் அணி செய்ய, கழுத்து மயிர் அழகு செய்ய, மேனி நிறத்தில் பாலை ஒத்த குதிரைகள் நான்கினைப் பூட்டிக் கொடுத்தான்.

“கோட்டிற் செய்த கொடிஞ்சி நெடுந்தேர்,
ஊட்டுளை துயல்வர, ஒரி நுடங்கப்
பால்புரை புரவி நால்கு உடன் பூட்டி”

- பொருநர் :168-165