பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தமிழர் வரலாறு


கறைமிடற்று அண்ணல், காமர் சென்னிப்

பிறை துதல், விளங்கும் ஒருகண் போல"
- புறம் : 55 : 1.5.

ஏனைய வெல்லாம், அவனுடைய முக்கண் - "முக்கண் செல்வர்" (புறம் , 6 : 18), சடைமுடி, "நீள் நிமிர்சடை முது முதல்வன்" (புறம் : 166 : 1-2), நீல நிறக் கழுத்து, தலையில் கூடிய பிறைத் திங்கள் பற்றிய வெறும் குறிப்புகளே. [பால் போலும் ஒளிவிடும் பிறைத் திங்கள் கூடிய தலையையும், நீலமணி போலும் நிறம் வாய்ந்த கழுத்திளையும் உடையான்.]

"பால்புரை பிறைநுதல் பொலிந்தசென்னி

நீலமணி மிடற்று ஒருவன்"
- புறம் : 91 : 5-6.

அகத்தில் வரும் ஒரு பகுதி, முக்கண் சிவனைக் குறிப்பிடுகிறது. "உலகமெல்லாம் சென்று பரவும், நலம் தரும் நல்ல புகழ் வாய்ந்த நான்மறையாகிய முதுபெரும் நூலை அருளிய, முக்கண் கடவுள் வீற்றிருக்கும் ஆலமரம் நிற்கும் மன்றம் அழகுபெற இயற்றப்பட்ட."

"ஞாலம் நாலும் நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல், முக்கண் செல்வன்,

ஆலமுற்றம் சுவின்பெறத் தைஇ"
- அகம் : 181 : 15.18:

[புறம் : 198, வரி 9 ல், "ஆலமர் கடவுள்" என்ற தொடர் வருகிறது. அத்தொடர்க்கு, "ஆல் இலையின் கண் மேவிய திருமால்" எனப்பொருள் கொண்டுள்ளார். அத்தொடர், பழந்தமிழ் இலக்கியங்களில், சிவனை மட்டுமே, குறிக்க வழங்கும் பொதுவான சிலப்புத் தொடர் ஆதலின் உரையாசிரியன் உரை விளக்கம், காலத்தொடு முரண்படுவதாகும்.]