பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

205


பூஞ்சோலைகள் மலிந்த உலகத்துக் குடிவாழ்நர், தேவர்கள்". ["பொலம் பூங்காவின் நன்னாட்டோரும்." (புறம் : 8 : 1.2)] "மக்கள் மிகவும் அருகிக் சென்றடையும் உலகம்", ["அரிது செல் உலகு" (புறம் : 260 21)], கடவுளர் உலகம் : ["புத்தேள் உலகம்" (புறம் 22 : 85)], "தேவர் உலகம்" (புறம் : 228 : 1.1), "சிறந்த மக்கள் சென்றடையும் உலகம்," [உயர்ந்தோர் உலகம் "(புறம் : 176 : 20) மக்களில் தலையாய மக்கள் வாழும் உலகம்", [மேலோர் உலகம் புறம் : 229 : 22)] என்றெல்லாம் சுவர்க்கம் அழைக்கப்படும். உலகத்தின் முடிவிடம் என்றும் அது அழைக்கப்படுகிறது. "நிலம் ஆகாயம், சுவர்க்கம் என மூன்றும் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடுக்கில், முதற்கண்ண தாகிய நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின் கீழும், மேலதாகிய கோலோகத்தின் கண்,"

"முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டில்
நீர்நில நிவப்பின் கீழும், மேலது

ஆன் நில உலகத்தானும்."
- புறம் : 6 : 5.7

அது, வாடாத மலர்களையும், இமையா நாட்டத்து இறைவர்களையும், நது மணம் நாறும் உணவுப்பொருள்களையும் கொண்ட உலகம்," [எளிதில் அடைய இயலாதது] என, அது, மீண்டும் விளக்கப்பட்டுளது.

"வாடாப்பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும் பெறல் உலகம்."
- புறம் : 62 : 1.6.1

காலன் என்று அழைக்கப்படும் அருள் நோக்கு இல்ல தான் கொண்டு செல்ல, மேலோர் உலகம் சென்றான்.

"காலன் எனும் கண்இலி உய்ப்ப

மேலோர் உலகம் எய்தினன்."
-புறம்: 240,5.