பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தமிழர் வரலாறு


கர்மா

இப்பிறவியில் செய்த நல்வினைப் பயன்களை, இறந்து பெறும் பிறவியில் அறுவடைசெய்து அனுபவிப்ப தாம் கர்மா பற்றிய விதிமுறை, ஒரு பாடற் பகுதியில் கூறப்பட்டுளது. ["ஈண்டுச் செய் நல்வினை யாண்டுச் சென்று உணீஇயர்" (புறம் : 214 : 19)] மற்றொரு பாடற்பகுதியில், ஒருவன் செய்த நல்வினைப்பயனை, மறுஉலகில் சென்று நுகர்வதா, அல்லது, இவ்வுலகிலேயே மறுபிறவி எடுத்து நுகர்வதா என்பது பற்றிய வாதம் இடம் பெற்றுளது. இப்பாட்டு, உயிர்துறக்க வடக்கிருந்த போது, கோப்பெருஞ்சோழனால் பாடப்பட்டது. ["உயர்த்தனவே உள்ளும் உயர்ந்த உள்ளம் வாய்ந்த உயர்ந்தோர்க்கு, அவர் செய்து நல்வினைப் பயனை அனுபவிக்க நேரின், அவர்க்கு, நல்வினை தீவினை இல்லா உம்பர் உலகத்தில் இன்பம் அனுபவித்தல் கூடும். அது கூடிதாயின், இவ்வுலகில் மாறிப் பிறப்பே இல்லையாகும் : மாறிப் பிறவாராயினும், இமயத்துச் சிகரம் போலும் தம் பெரும் புகழை, இவ்வுலகில் நிலை நாட்டி விட்டு, வசையிலாத் தம் உடலோடு கூடியிருந்தே இறந்து போவர் : அதுவே தலையாய செயலாம்"]

"உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்,
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்,
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்எனில்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும் ;
மாறிப் பிறவர்ர் ஆயினும், இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்

இதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே."
- புறம் : 214 : 6-13.

இப்பாட்டின் ஈற்றடிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மறுபிறப்புக் கொகை, "இப்பிறவியில், நீயும் யானும் கூடி