பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

207


இன்புற்றிருப்பது போல, மறுபிறவியிலும், இடைவிடாது காட்சி அளிக்கும் உன்னோடு கூடிவாழும் நிலையைச் சிறந்த விதி கூட்டி வைக்குமாக" எனக்கூறும் பிறிதொரு பாட்டிலும் இடம் பெற்றுளது.

"இம்மை போலக் காட்டி, உம்மை
இடையில் காட்சி நின்னோடு

உடன் உறை வாக்குக உயர்ந்த பாலே"
- புறம் : 236 : 10.12.

[பிற்காலத்தில் நடைபெற்றது போல் அல்லாமல், இப்பாட்டில், இம்மை, உம்மை, பால் என்ற சொற்களுக்கு நிகரான சமஸ்கிருதச் சொற்கள் ஆளப்படாமல், இம்மை, உம்மை, பால் என்பனவே ஆளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.] மற்றொரு பாடற்பகுதி, "இவ்வுலகின் இயல்போ கொடிது : ஆதலால், இதன் இயல்பினை உணர்ந்தவர், வீடு பே ற் றி னை த் தரும் நல்லறச்செயல்களை அறிந்து செய்வாராக" எனப்பொருள் செய்யப் படுகிறது. ஆனால், "இவ்வுலகின் இயல்பினை உணர்ந்தவர்கள், அது தரும் இன்னல்களையெல்லாம் இனியனவாகவே ஏற்றுக் கொள்வாராக" என்பதே அதன் பொருந்து பொளாகத் தெரிகிறது:

"இன்னாது, அம்ம இவ் உலகம்;

இனிய காண்கு இதன் இயல்பு உணர்ந்தோரே."
- புறம் : 194 : 6-7.

வேத வேள்விகள் :

கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் ராஜாக்களால் அளிக்கப்பட்ட, யாகங்களுக்கான பேராதரவு, முந்தைய இரு அதிகாரங்களில் விளக்கப் பட்டது : அது, ஈண்டு, மீண்டும் எடுத்துக் கூறத் தேவையில்லை. புறநானுாற்றின் கடைசிபாட்டு, நலங்கிள்ளி நாட்டு, வேள்வித் தூண்களைக் குறிப்பிடுகிறது : "கேள்வி மலிந்த வேள்வித் துாண்" (புறம் : 400 : வரி : 19,) வேள்வித் தீயை அணைய