பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

211


மூவேழ்துறையும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக !"
-புறம் : 166 : 1-2.

முன்பே எடுத்து ஆளப்பட்டு மொழி பெயர்க்கப் பட்ட அகம்: 181: "நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்" வரி 15. சிவன், வேதம் ஓதுவதைக் குறிப்பிடுகிறது. வேத நெறி பிறழ்ந்தவர் என்ற குறிப்பு. பெளத்தர்களையும், சமணர்களையும் குறிப்பதாம். பழைய தொகை நூல்களில் காணப்படும் ஒரே குறிப்பும் அதுவாம். [நூலாசிரியர் கூறுவதுபோல், பெளத்தர்கள் சமணர்களைப் பற்றிய குறிப்பு, இப்பாட்டில் எங்கும் இடம்பெறவில்லை. ஆகவே, பெளத்த, சமண நெறிகள், தமிழகத்தில் சங்க காலத்திலேயே இடம் பெற்று விட்டன என்பதற்கு, இப்பாட்டு சான்றாக அமையாது. மொழிபெயர்ப்பு ஆ சி ரி ய ர்] இப்புறச் சமயிகள், நகரங்களுக்கு அப்பால், மலைக் குகைகளில் வாழ்ந்து வந்தனர். ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில், அரசர்களின் ஆதரவுபெற்று, அவர்களைத் தங்கள் மாணவர்களாகவும் கொண்டுவிட்டபோது, ஒருபால் அவர்களுக்குள்ளேயும், மறுபால் அவர்களுக்கும், சைவ, வைஷ்ணவர்களுக்கும் இடையேயும், கி. பி. 600க்கும் 900க்கும் இடையில், சிவன் குறித்தும், விஷ்ணு குறித்தும் பாடப்பெற்ற வழிபாட்டுப் பாடல்களில் பல இடங்களில் குறிப்பிடப்படும், கொடிய சமய வாதங்கள் தொடங்கலாயின. வேதவேள்விகள் பற்றிய குறிப்பு அகத்திலும் புறத்திலும், இவ்வகையில் ஒரு சிலவே. வேதவேள்விகளைப் போற்றிப் பாராட்டும் பாக்களும், போற்றிப் புரக்கும் அரசர்களும், நாம் ஆய்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தின் இறுதிக் காலத்தே வாழ்ந்தவராதல் வேண்டும் என்பது, தொல்காப்பியம், ஆரியர்களின் நால்வருணக் கோ ட் பா ட் டை த், தமிழர்கள் மீது திணிக்க முயல்கிறது என்றாலும், அது ஆரிய தர்ம சாஸ்திரத்தில் வகுத்த பிராமணர்களின் அறுவகைப் பணிகளையும், அரசர்களின் ஐவகைப் பணிகளையும் குறிப்பிடு-