பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

215


உடலைப் புதைத்தல்

இறந்தார் உடலைச் சுடும் வழக்கத்தை அடுத்தடுத்து, மண்ணுள் புதைக்கும் வழக்கமும் தொடர்ந்து வந்துளது. மேலே எடுத்துக்காட்டிய பாடற் பகுதிகளில், சுடுதல், அரசர்கள் அரசர் நிகர் செல்வர்களைத் தொடர்புபடுத்தியே கூறப்பட்டுளது. ஏழை எளிய மக்கள் வெறும் நிலத்தில் புதைக்கப்பட்டனர் : அரசர், அரசர் நிகர் மேலோர், தாழியுள் இட்டுப் புதைக்கப்பட்டனர்.

"வியன்மவர் அகன்பொழில் ஈமத்தாழி

அகவிதாக வனைமோ".
-புறம் : 258 : 5-6

அரசர்கள் புதைக் கப்படவேண்டுமா, எரிக்கப்பட வேண்டுமா என்பது விருப்பத்தைப் பொருத்தே இருந்தது என்பது தெளிவு. குளமுற்றத்துத் துஞ்திய கிள்ளிவளவன் இறந்த பின்னர், புலவர், ஐயூர் முடவனார், ஊர்க் குயவனைப் பார்த்து, "அத்தகு பெரியோனை அடக்கம் செய்யவல்ல பெரிய தாழியை வனைய நீ விரும்புவையாயின், எப்படியும், பெரிய இந்நிலைப் பரப்பையே உருளியாகக் கொண்டு, உயர்ந்த பெருமலையையே மணனாகக் கொண்டு வனைய வேண்டிவருமே! அது!உன்னால் இயலுமா ?’ என வினவுகிறார்.

"அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி,
வனைதல் வேட்டனையாயின், எனையதுாஉம்,
இரு நிலம் திகிரியாப், பெருமலை

மண்ணா, வனைதல் ஒல்லுமோ நினக்கே !"
-புறம் : 228 : 12-15:

சுடுதல் பற்றிய குறிப்புகள், புறத் தில் ஒரு சிலவே : ஆனால், ஈமம், காடு என்ற சொற்களுக்குச் சுடுகாடு எனும் பொருள் உடையதாகத், தொடர்ந்து பொருள் கூறுவதன் மூலம், படிப்பவர், அந்தகைய குறிப்புகள் மிகப்பலவாம் எனக்