பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

217


"களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூவும் கூகையொடு, பிறழ்பல்
சமவிளக்கில் பேஎய் மகளிரொடு

அஞ்சுவந்தன்று இம்மஞ்சுபடு முதுகாடு"
-புறம் 356 : 1.4.

புறம் 359, இடுகாடு பற்றிய, இறுதியாக விடுபட்டுப் போன குறிப்புக்களைக் கொண்டுளது. அது கூறுகிறது : "முற்றவும் தேய்ந்து பாழுற்ற, முட்செடிகள் மூடிக்கிடக்கும் மயக்கும் பல கால்வழித்தடங்களைக் கொண்ட பரந்த இடத்தில், வேறுவேறுபட்ட ஒலிகளை மாறி மாறி எழுப்பும் கு ர லி னை யு ம், கொடிய வாயினையும் உடைய கோட்டானோடு பிணந்தின்னும் குறுநறிகளும் கூடி ஒருபால் இருந்து, பற்களில் சிக்கிக்கொள்ளுமளவு தசையினைக் கடித்துத் தின்று கொண்டிருக்க, பெண் பேய்கள், பிணங்களைத் தழுவிக்கொணடு, வெள்ளிய தசையைத் தின்றதனால், வெறுக்கத்தக்க புலால் நாற, களர் பரந்த அவ்விடத்தில், இடுகாட்டு விளக்கொளியில் மாறிமாறி அடிவைத்துக் கூத்தாடிக் காண்பவர் அஞ்சத்திரியும் இடுகாடு."

"பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு
பிணந்தின் குறுநரி நிணம் திகழ் பல்ல,
பேய் மகளிர் பிணம் தழுஉப் பற்றி
விளர் ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
களரி மருங்கின் கால்பெயர்த்து ஆடி
ஈம விளக்கின் வெருவரப் பெயரும்

காடு."
-புறம் : 359 : 1-8.

எடுத்துக் காட்டிய இப்பாடற் பகுதிகள் அனைத்திலும், காடு என்ற சொல், ஆளப்பட்டிருக்கும் இடம் நோக்க, இடுகாடு என்றே தெளிவாகப் பொருள் உணர்த்துவதாக