பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தமிழர் வரலாறு

இருக்கவும், உரையாசிரியர், அச்சொற்குச் சுடுகாடு என்றே விடாது பொருள் கொண்டுள்ளார் என்பது மீண்டும் குறிப்பிடத்தக்கதாம். உயிர் பிரிந்த உடலை அப்புறப்படுத்தும் ஆரியத்திற்கு முந்திய முறை, மண்ணுள் புதைப்பதே; தீயிட்டு எரித்தல், ஆரியச்செல்வாக்குத் தமிழர் உள்ளத்தில் ஆட்சி செலுத்தத் தொடங்கியபோது, தீ வழிபாட்டு நெறியைப், பின் ப ற் று வோ ரா ல் நு ழை க் க ப் ப ட் ட து என்பதைப் புரிந்து கொள்ளாத காரணத்தின் விளவே" அவ்வாறு பொருள் கொள்ளுதல்.

இறந்த உடலை அப்புறப்படுத்தியது தொடர்ந்து மேற்கொள்ளும் ஈமச்சடங்குகள், அவை பற்றிக் கூறும்பாடற் பகுதிகள், ஆரியச் செல்வாக்குடையவாகப் பொருள் கூறப்பட்டுள்ளன என்றாலும், அவை, ஆரிய ஈமச் சடங்கு முறைகளால் பெரிய அளவில் ஆட்கொள்ளப்படவில்லை. "இறந்தவன்பால் மாறா அன்புடைய அவன் மனைவி, பெண் யானையின் அடிஅளவான செய்த மண் மேட்டை மெழுகிப், புல்லைப் பரப்பி, அதன் மீது, அவனுக்காக எனப் படைத்த, இனிய சிறிய சோற்றுப் பிண்டம்," கூறப்பட்டுளது.

"பிடியடி அன்ன சிறுவழி மெழுகித்
தன் அமர் காதலி, புல்மேல் வைத்த

இன் சிறு பிண்டம்."
-புறம் : 234 : 2-4.

புல் என்பது தருப்பைப்புல் எனப்பொருள் கூறப்பட்டு, இது, ஆரியச் சடங்கு முறையாக விளக்கம் அளிக்கப்பட்டுளது. அவ்வாறு இருக்க முடியாது. காரணம், ஆரியச் சடங்கு முறையில், பிண்டம் கொடுப்பது, இறந்தவனின் வழித்தோற்றலாம் மகனே அல்லது மனைவியாம் கைப்பெண் அல்லள். இது, பழைய தமிழ்ச் சடங்காம் என்கிறது. வேறு ஒரு பாடற்பகுதி. அது, இவ்வாறு கூறுகிறது : "பாடையை ஒரு பால் வைத்த பின்னர், புல் மீது வைக்கப்பட்ட, கள்ளையும், சிறிய சோற்றுத் திரளையும்," இன்னு